உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 09, 2004
# 40 கானத்தில் நிலைமறந்து
ஆண்:
கானத்தில் நிலைமறந்து
காதலை வருடுகின்றேன்
திராட்சைக்கொடி மேலிருக்க
தாகமாய் ஏங்குகின்றேன்
(கானத்தில்...
பெண்:
பந்தலிட்டு நிழல் கொடுத்தால்
பருகிட நறிகள் வரும்
கோலமயில் ஆடக்கண்டால்
சோலையெங்கும் தேன் கசியும்
பட்டுப்பூச்சி படபடக்க
பூவின் மடி இடம் கொடுக்கும்
(கானத்தில்...
ஆண்:
வெப்பத்தில் சமைத்ததம்மா
வாலிப உணர்ச்சியெல்லாம்
வழங்குதல் பெறுதல் ரெண்டும்
உறவுக்கு வழிகளம்மா
எந்தப்புரம் நீ வசிப்பாய்
அந்தப்புரம் நான் இருப்பேன்
(கானத்தில்...
பெண்:
அந்தப்புர ஆசையெல்லாம்
நகர்த்துங்கள் அந்தப்புரம்
வெளிப்படை ஆனதனால்
வெட்கமா விலகிவிடும்
உண்மை அன்பு கிடைத்த பின்பே
பெண்மை மனம் பறிகொடுக்கும்
(கானத்தில்...
# 39 தப்புத்தான் தப்புத்தான்
தப்புத்தான் தப்புத்தான்
வேட்டையாடி வளைச்சது
வேடன் நான் உனைப்பிறித்த
மூடன் நான்
கூடவா உன் குடும்பத்தில்
கூடவா
இந்த முறை நான்
வேடம் கலைந்தேன்
வேட்டைப் பொருளை
மீட்டுக் கொடுப்பேன்
(தப்புத்தான் தப்புத்தான்...
ஊரெங்கும் கேட்குது உன் முழக்கம்
வீண் வம்பு என்றும் அது உன் பழக்கம்
அன்னையிடம் உன்னை கொண்டு சேர்ப்பது
பாவத்திற்க்கு பரிகாரம் கேட்பது
தெய்வத்திற்கே முகம் கொடுத்தவன்
தும்பிக்கையால் வாழ்த்து அளிப்பவன்
சண்டித்தனம் பன்னுவதை மறந்திடுவாயா
(தப்புத்தான் தப்புத்தான்
தாழ்வான எண்ணத்திலே நடக்கலை
தவறாக தெரிந்ததும் பொருக்கலை
வேடிக்கையாக வேட்டையாடினான்
வினையாக வந்ததேன் வினாயகா
மண்ணிப்பது உந்தன் மறபிலே
மனிதனின் பிழை படைப்பிலே
உருவம் போலே உள்ளத்தையும் பெரிது பன்னு தோழா
(தப்புத்தான் தப்புத்தான்...
# 38 ஊதக் காத்து வீசும்
பெண்:
ஊதக் காத்து வீசும்
உடல் உள்ளம் எங்கும் கூசும்
புதிதாய் புலப்படும்
கனவாய் முலைவிடும்
நட்பல்ல வேற் நிலை
(ஊத...
நடன நயத்தை
அவன் விரல்கள் வரைந்திட
இதய தலத்தில்
ஒரு சிறகு விறிந்ததே
பரந்த வான்வெளி
விடலை பைங்கிளி
கலைஞன் என்று நோக்குமோ?
காதலென்று பார்க்குமோ?
ஆண்:
இரண்டும் ஒன்று சேர்க்குமோ?
(ஊத...
கலைஞன் மனதில்
கலைவாணி நீயடி
என்னுள் மா தவிப்பு
உன்னால் மாதவி
பெண்:
தென்றல் வாசமே
பூவின் சுவாசமே
கசிந்த பூவில் குற்றமா?
கவர்ந்த தென்றல் குற்றமா?
ஆண்:
இது இயற்கை ஈன்ற குற்றமே
(ஊத...
# 37 ஏரியில் மூழ்கிய தாமரை
ஆண்:
ஏரியில் மூழ்கிய தாமரை
சிவன் இழந்த கங்கையே
மங்கையே
நீருக்குல்லே கலந்ததேன்?
தருசெனும் நிலமது
நினைவு உரச நனையுதே
நிறையுதே
பெண்:
நினைவது இறப்பிலா?
கடந்த கால இழப்பிலா?
உறவு என்ற சொல்லின் அர்த்தம் வாழ்விலே
துறக்க வேண்டும் சோகம்
துறவுக் கோலம் போதும்
உன் வாழ்வில் என் சாவும் மோட்சமாகுமே
(ஏரியில்...
ஆண்:
பூமிக்கே வரமென
பூஜைப் பொருளாய் அமைந்தவள்
பாலை மண்ணில் ஊற்றெடுத்த பரவசம்
திங்கள் நீங்கும் வானிலே
மிண்ணல் கீற்று வெளிச்சமா?
என் வாழ்வின் அர்த்த ஜோதி அனைந்துபோனதே
(ஏரியில்...
பெண்:
தேய்பிறை வானிலே
பெளர்ணமி விரைவிலே
இருளில் வீழ்ந்து வெளிச்சம் தேடும் இதயமே
உன்னை மீறித் துன்பமோ
அத்து மீறி இன்பமோ
என்றும் சேர்வதில்லை அந்த இறைவன் ஏட்டிலே
(ஏரியில்...
# 36 புல்வெளியில் பெண்மை
ஆண்:
புல்வெளியில் பெண்மை
உள்ளமெல்லாம் மென்மை
முன் வந்த நிலவினில்
கண் படவே இல்லை
காண்பதெல்லாம் உன்னை
பெண்:
வருகை தந்ததென்ன நீயும்
வந்த நோக்கம் என்ன?
அல்லி மலர்ந்திடும் நேரம் பார்த்து
கிள்ளி நுகர்ந்திடவோ?
(புல்வெளியில்...
பெண்:
அகன்ற தோள்கள்
அழைக்கும் கண்கள்
அரசன் அவன் நடக்க
ஆண்:
ஓடை நீரில் மிதக்கும் மலர்போல்
கன்னி படர்ந்திருக்க
பெண்:
நிகழப் போவதென்ன?
நிகழ வேண்டிக் கிடப்பதென்ன?
ஆண்:
உணர்ச்சிக் கடலில் பொங்கும் அலையை
கிளரும் பருவம் மெல்ல
(புல்வெளியில்...
பெண்:
வேடன் விழியில்
வேட்டைப் பொருள் நான்
விரும்பி வழங்கிடத்தான்
ஆண்:
அடையும் சுகத்தில் ஆணின் பங்கு
பாதி சதவிகிதம்
பெண்:
குற்றம் புரியுமுன்னே
என் மேல் குற்றம் சாட்டுவதோ?
ஆண்:
கூடி மகிழ்வதில் குற்றம் இருந்தால்
காதல் சிறை படுத்து
(புல்வெளியில்...
#35 உதட்டில் சுவை உணர்வில் சுமை
பெண்:
அன்புக்கொரு அணை கட்டிவைத்தேன்
ஆசையின்மேல் குற்றம் இல்லை
ஆண்:
உதட்டில் சுவை உணர்வில் சுமை
உனை ஒன்று கேட்க வந்தேன்
சுவை கூட்டிட சுமை நீக்கிட
கரம் கோர்க்க ஓடி வந்தேன்
இதயம் அது
அசட்டுக் கருவி
உனக்கே உறுகும்
நினைவைத் தழுவி
நீ எங்கே
நிஜம் எங்கே
நிழல் போரில்
கறைந்தே
மடியும்
(உதட்டில்...
காக்கும் கரங்களுக்குக் கைவிலங்கா?
கறையும் ஒளியில் திரி ஏற்றிடவா
இல்லை அனைத்திடவா?
இரண்டும் இயலவில்லை
என்ற நிலையில் என்னை
கொன்று கூண்டோடு கிள்ளி
குறையைத் தீர்ப்பாயோ கள்ளி
உன் வாசம் இல்லாமல்
அந்தத் தென்றல் தீயடி
பெண்:
அன்புக்கொரு அணை கட்டிவைத்தேன்
ஆசையின்மேல் குற்றம் இல்லை
ஆண்:
சேர்த்த கனவை எல்லாம் சிதைத்துவிட்டாய்
சிதிலம் சிதிலம் என உடைத்துவிட்டாய்
உண்மை மறைத்துவிட்டாய்
இருந்தும் மறக்கவில்லை
மறக்க இயலவில்லை
விழிகள் ஜண்ணல்கள் ஆகும்
உள்ளத்தின் உண்மைகள் காண
உன் போக்கு மாறும் போதும்
உன் மோகம் தூய்மையாகும்
(உதட்டில்...
#34 பகலிலே தவழும் சோலையில் பனிமூட்டம்
பகலிலே தவழும் சோலையில் பனிமூட்டம்
கதிர் தொட ஓடை சிலிர்ப்பதும் ஒரு நாணம்
பகலிலே தவழும் சோலையில் பனிமூட்டம்
தேவதை போலே புகை சூழவே
ஓடினாள் உலவினாள் மான் போல்
நீந்தினாள் நதியில் தாமரை அவள் தோழி
சாமரம் மாருதம் சேர்க்காதோ
(பகலிலே...
காதோரம் கொஞ்சும் குயிலின் கானங்கள்
மலர் இதழ் அழைப்பிதழ் ஆகும்
இயற்கையின் அழகிற்க்கு இளமையும் நிகராகும்
கீழ் விழும் இலைகளும் கலை நயமே
(பகலிலே...
கோவில், மசூதி, கர்த்தர் ஆலயம்
காலையை நோக்கி வாழ்த்துப் பாடுமே
இறைவனும் சேர்ந்து துயிலெழும் காலம்
நம்பிக்கை ஓங்கிட நாள் தொடங்கும்
#33 கிள்ளிக் கிள்ளி நுகரத்தான்
பெண்:
கிள்ளிக் கிள்ளி நுகரத்தான்
மல்லி முல்லை பூக்கிறதோ
ஏனைய்யா வீணா இந்தப் போக்கு?
அன்பையளிக்கும் போர்வையிலே
கொல்லையடிக்கும் பார்வையிலே
நீ செய்யப் பாக்குற பொல்லாப்பு
ஆண்:
உள்ளம் சொல்வது ஓர் மொழியோ
உருவம் சொல்வது ஓர் மொழியோ
உன்னுள்ளே ஏன் இந்த அக்கப்போரு
மூங்கில் மரமே உன் இனமோ
மரங்கொத்திப் பறவை என் இனமோ
குழலோசை கேட்கும் நாள் கூறு
பெண்:
சஞ்சலப்படுமே பெண்மை உத்துப் பார்க்க
சந்தர்ப்பம் வருமே உன்னை என்னை சேர்க்க
ஆண்:
அட இன்று இன்றென
நாளை வேறென நினைத்துப் பார்த்தால் தோது
(கிள்ளிக் கிள்ளி...)
ஆண்:
நாம் மொட்டு விட்டும் மொட்டு விட்டும் மலரல
தொட்டு விட்டும் தொட்டு விட்டும் தொடரல
இருந்தும் இல்லை இருந்தும் இல்லை இந்த
உறவென்ன உறவென்று புரியலையே
பெண்:
உன் சித்தம் போல சித்தம் போல என்னை
விருந்துபோல வழங்கிவிட்ட போது நீயும்
பித்தம் தெளிஞ்சு பித்தம் தெளிஞ்சு பின்னே
என்னை மதிக்கனுமே
ஆண்:
கூட்டுக்கிளிகளும் காக்கை குருவியும்
காதல் பேசுமே
பெண்:
நீ மனித வாழ்கையின் எல்லையோடுதான்
மகிழ்ந்து வாழுமே
ஆண்:
அடி உன் தேகம் மேல்
வரும் சந்தேகமே
பெண்:
உன் எண்ண ஊற்றிலே என்னை ஊற்றிட
தீயாகுமே
(கிள்ளிக் கிள்ளி...)
பெண்:
உன் தோள்களோடு ஊஞ்சலாக என்னை
முதுகுத்தோலை மெத்தையாக்கி என்னை
இனைத்துப் பார்க்க இந்த நெஞ்சம் கொஞ்சம் ஏங்குமே
ஆண்:
இந்த ஊதக் காத்து ஊத காத்து வீசயில்
மொட்டவிழ்ந்த முல்லைப் பூக்கள் பேசயில்
உச்சி முகர்ந்து உன்னை அனைக்க உள்ளம் ஏங்குமே
பெண்:
உள்ளம் வெள்ளையாம் ஆசை கொள்ளையாம் தெரியாததா?
ஆண்:
இயற்கையானதில் இத்தனை தடை
இருக்கலாகுமா?
பெண்:
நீ கழுகு மாதிரி
நான் மெழுகு மாதிரி
ஆண்:
காதல், திரி இன்றி எரிகின்ற தீ மாதிரி
(கிள்ளி கிள்ளி...)
Thursday, April 08, 2004
#32 போர்முரசே போர்முரசே
வீசிடும் வார்த்தையெல்லாம் தலை சுற்றித் திறிய
மனது நோகுதடி
என் மனது நோகுதடி
ஊமைக் காயங்கள் இங்கு உறைந்து கிடக்கையில்
தழும்பிக் கேட்குதடி
குரல் தழும்பி கேட்குதடி
மூங்கில் பலகை
ஏறிடும் வரையில்
முயற்சி செய்திடுவேன்
தினம் முயற்சி செய்திடுவேன்
போர்முரசே போர்முரசே
முழங்குது இதயத்திலே
வாடிக்கையாய் வாழ்பவனை
நினைக்கின்ற நேரத்திலே
கண் இமைப்பதும் கடினம்
நீ தோன்றிடும் தருனம்
தீ கொழுந்துவிடும் எரியும் எரியும்
தனிமை நீங்கும்வரை எரியும் எரியும்
(போர்முரசே...
வெட்ட வெட்ட உறவது வளரும்
விறகென எரித்திட உதிரும்
சாம்பலா திருநீரா?
திட்டு திட்டாய் மலர்களில் படரும்
பனித் துளி தடமின்றி மறையும்
மலர் இதழ் தவிக்கும்
நினைவுகள் மலரா?
உறவுகள் பனியா?
களைத்திடும் கதிர் விதியா?
காதலின் முகத்தில்
மகிழ்விருந்தாலும்
அகத்தினில் துயர் கதியா?
(போர்முரசே...
கையிலிட்ட சந்தனமாய் மணக்கும்
நீ உன்னவளை நெருங்கிட தவிக்கும்
கணல் என்றே தகிக்கும்
சாறல் விழ நீர்குலங்கள் சிரிக்கும்
குமிழ்களாய்க் கொக்கறித்து களையும்
நம் காதலும் குமிழா?
நினைவுகள் சுமையா?
சுவைத்திடும் வலியா?
சிறைக்குள்ளே விடுதலையா?
இறப்பதும் மணப்பதும்
கால்கட்டில் முடியும்
நம் நிலை இதில் முதலா?
(போர்முரசே...
#31 கார்முகிலோ
கார்முகிலோ. . .
கறையும் பொழுதோ. . .
கார்முகிலோ
கறையும் பொழுதோ
பெருமூச்சிடும் நிலமகளோ
வளைந்து பார்க்கும் வானவில்
மறைந்து பாடும் பூங்குயில்
உதாரணம் இலாததோர்
வினோதம் இந்த பேர் அழகோ
(கார்முகிலோ...
கற்பனை கோடி செய்தேன்
ஏட்டில் ஏற வில்லை
சொப்பனம் முழுதும் தேடி
பார்த்தேன் காண வில்லை
இத்தனை அற்புதங்கள் கட்டிய வித்தகன்
இடையில் நம்மையும் ஏன் விதைத்தான்?
வித்தையைக் கையிலே வைத்த கையுடன்
சர்ச்சையை நெஞ்சிலே ஏன் விதைத்தான்?
புனிதம் படைத்த பின்னே
கணிதம் கற்றுத்தந்தான்
கடலைத் தழுவச் சென்றால்
சிறகில் ஈரம் என்றான்
எடை பார்க்கும் போது எஞ்ஜியதேது?
(கார்முகிலோ...
வளைந்து பார்க்கும் வானவில்
மறைந்து பாடும் பூங்குயில்
சிந்தனை மூட்டும் தீயோ
திங்களை வாட்டும் நோயோ
வெண்ணிலா பூசும் மஞ்சல்
கர்ப்பனை ஆடும் ஊஞ்சல்
சிந்திய தேன்குடம் பெளர்ணமி சிரிக்க
சுவைக்கப் பார்க்குது அலை நாக்கு
சந்தனத் தேரென உச்சியில் உலவ
கவிதை கசிந்திடும் உள் நோக்கு
இருட்டும் வெளிச்சமும் இருபுரத்தில்
ஏற்றி இறக்கிடும் வானகமே
இந்த ஊமைக் காயம் விடைபெறும் நேரம்
இரவில் ஒலியும் வாழும்
பகலில் நிலவும் தோன்றும்
இங்கு ஏற்ற தாழ்வும் சரிசமமாகும்
#30 ஆழ்கடல் மேலே
ஆழ்கடல் மேலே
ஆழ்கடல் மேலே
பாய்மரம் போலே
நான் இருப்பேனே
(ஆழ்...
பூக்களை அடுக்கி மாளிகை அமைப்பேன்
பாக்களை வடித்து பூஜைகள் வைப்பேன்
கத்தைகள் கோடி பணம் கிடைத்தாலும்
தத்தையைப் போல சுகம் கிடைக்காது
(ஆழ்...
பிள்ளைபோல் உந்தன் வெண் மடி ஏறி
ஆனந்தமாக கால் அசைப்பேனே
கண்வலை வீசாமல் நான் விழுந்தேனே
கவிதையாய் ஆனாலும் காதுளைப்பேனே
ஆத்திரத்தில் வெட்கம் மீது போர் தொடுத்தேனே
(ஆழ்...
பெண்பால் அவளைப் பார்த்த நண் நாள்
என் பால் ஆசையும் ஊற்றெடுக்கும்
வெண்தாள் அவளைத் தந்துவிட்டால்
பேனா எந்தன் மை கசியும்
மல்லிகை முல்லை பனியெனப் பெய்யும்
கன்னிகை உந்தன் கால்வலிக்காக
மெத்தன நெஞ்சில் சொத்தென வைத்தும்
பித்தனைப் பார்த்து புன்சிரிப்பாயோ
வேடிக்கை பார்க்கும் ஆண் வாடிக்கை எனக்கில்லை
கேளிக்கை இல்லாமல் கொடுக்கின்றேன் காணிக்கை
எண்ணிக்கையில் இவனும் என்று நம்பிக்கை வைக்காதே
(ஆழ்...
#29 வானவில் எய்திடும் கணைதான் புஷ்பமா?
வானவில் எய்திடும் கணைதான் புஷ்பமா?
வாசனை இல்லாமலே மலர் மயக்குமா?
வாலிபத்தை நீக்கினால் வாழ்வு ருசிக்குமா?
(வானவில்...
நீரில்லாத பூமியில் வேர் வசிக்குமா?
போரில்லாத வாலிபம் படையெடுக்குமா?
(வானவில்...
அனைத்தால் பாவமா?
நீ அனையும் தீபமா?
வெட்கமா விசனமா?
சுற்றமா சூழலா?
தடைதான் யாரம்மா?
தனிமை நீங்குமா?
தன் இமையே நீங்குமா?
தன்னிலை காட்டுமா?
பொய்முகம் சூட்டுமா?
தவிப்பே மோகமா?
இந்த தவிப்பே மோகமா?
(வானவில்...
ஏங்கிடா ஏக்கமா?
போக்கிடா தூக்கமா?
உறவு ஏற்குமா?
புது வரவை வாழ்த்துமா?
ஆதியே அந்தமா?
கரணமா மரணமா?
விதிதான் கூறுமா?
மடிமேல் மோட்ச்சமா?
இல்லை மடிந்தே மோட்ச்சமா?
கறுவரை பாசமே?
மணவரை ஏற்றுமா?
கல்லரை நெசமா?
நாம் கல்லரை நெசமா?
(வானவில்...
#28 கணை விடுத்ததோ காமன்
கணை விடுத்ததோ காமன்
காயமுற்றதோ குடும்பம்
இவரிருவர் போய்ச் சேரும் இடம்
விதி எழுதும் முகவரி
முறைகேடோ பலி ஆடோ?
(கணை...
கள்ளம் கபடம் என்றா உரைக்க இந்த விபரீத நிலையை
ஆசைக் கடலில் முத்தேது
நீந்த நினைத்தாள் கவிழ்ந்தாள்
குளித்தும் முழுகாதிருந்தாள்
இன்பம் அடைய இந்த விலையோ?
(கணை...
சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
வழியில் வந்த உறவை
ஏற்க மறுத்தும் ஏற்க
மோக வலையில் மீண்கள்
மோன நிலையின் அருகில்
தவறு இருந்தால் இயற்கை மீதே
(கணை...
#27 சிகப்பு நிறத்துச் சாயம்
ஆண்: சிகப்பு நிறத்துச் சாயம்
இதழ் ஏறியதென்ன
பூ நிறத்தை மறைக்கலாமோ
அதன் அர்த்தமுமென்ன
பெண்: சிந்திடும் வெள்ளி சாயத்தை தள்ள
புன்னகை மின்னி முத்திடும் கன்னி
ஆண்: சிகப்பு நிறத்துச் சாயம்
இதழ் ஏறியதென்ன
பெண்: இதழை நாளிதழ்போல் நீ வந்து வாசி
சேதியை செரிக்கும் வரை யோசி
ஆண்: வாசிக்க கண் கொண்டு வந்தால் போதாது
உதட்டால் எழுத்துக் கூட்டலாமா
பெண்: வாசிக்க வந்தவுடன் வாத்தியம் மாறியதென்ன
பூசிக்க வந்துவிட்டு வேடிக்கை பார்பதென்ன
ஆண்: செந்தாமரை குலம் விட்டு படியேருமா
பாசத்திலே கால்தவறி கை சேருமா
பெண்: என் ஆழம் தெரியாது நீ இறங்குவது உந்தன் குற்றம்
(சிகப்பு...
#26 இசைநாடியே
இசைநாடியே
இங்கு உனக்காகத் துடிக்கும்
உயிர்காற்றைச் சுறக்கும்
முகம் இங்கே அகம் அங்கே
அறிவால் அறிவாய்
எனை தினம் உடலால் பிறிவாய்
தொடர்ந்திரு
இசைநாடியே
கலையாலே கிடைத்தாய்
வரம் கொடுத்து எடுத்தாய்
சுய நினைவின் திசை மாற்ற
மதுரசம் வசம் இருந்தேன்
வழிவகுத்துக் கொடுத்தாய்
கலையை விட உயர்ந்தாய்
கலையை விட உயர்ந்தாய்
கலைஞனுக்கு உயர் தாய்
சேய் என்று அழ
நான் நன்றி சொல்ல
கறை படிந்த குறை மறந்து
திரை விலக்கு
(இசைநாடியே...
ஆகாயமே ஒளியினில் மலர்ந்தும் மேகம் கதிரை மறைக்கும்
சாமான்யன் கலைச் சறிவினில் கூட கலையின் சாரம் தவிக்கும்
ஆதார சுருதி அந்து போனதடி அன்று உன்னைப் பிறிந்து
ஆவேச நிலை இன்று போனதடி உந்தன் வருகை தெரிந்து
பருகிடப் பெருகிடும் அமுத சுரபி
கலைஞனின் மனதில் இசை எனும் அருவி
காணாத இன்பமேது கலையின் மடியில் வாழும்போது?
காட்டாரு கலையின் பாதை கருணை என்றும் காட்டிடாது
கானம் போயும் மானம் போயும்
பாதை காட்ட போதை ஓட்ட
காப்பாற்ற வந்தாயே
(இசைநாடியே...
Wednesday, April 07, 2004
#25 ஊமை நாடகமோ
ஊமை நாடகமோ
கூடல் முன்னுரையோ
செந்தூரம் நீ சூட
பொன் மாலை பின்வாங்க
பொழுதும் எழுதும் முறையிடவே
(ஊமை...
சூலம் ஏந்தும் கையும் ஆழம் தேடும் உன்னால்
அன்பு கொண்டு எந்தன் நெஞ்சை ஆதரி
வேகம் கட்டுமீற மோகம் இட்டு காப்பேன்
ஆசைத் தீயில் என்னை மட்டும் சேகரி
தீவில் ஏற்றும் தீபமாய்
பாதை காட்டும் ஜோதியாய்
வாழ்வை மாற்றினாய்
எந்தன் தாழ்வை ஓட்டினாய்
அன்புக்குத் தானே ஆதாரப் பூக்கள்
நெஞ்சுக்குள் வேராய் நீ ஊன்றும் நாட்கள்
அஞ்சல் பெட்டி மூழ்கும் நமது வரியில்
(ஊமை...
கால்கள் நனைப்போர் பாதி மூழ்கிப்போவோர் மீதி
காதலென்னும் போதை ஊட்டும் பார்கடல்
மூழ்கிப் போனேன் உன்னில் முத்துக்குளித்தேன் என்னில்
மோகம் அறித்த முத்து கண்டோம் காதலில்
பாறை மீது பாசமே
அலைகள் வைத்து போகுமே
கொல்லும் ஆயுதம் உன்னால் தந்தமானது
பூவையின் கால்கள் பின்னும் நார் ஆவேன்
கால்கட்டில் தானே மலரும் பூ நானே
பூங்கா இனிமேல் உன்னை ஏந்தாது
(ஊமை...
#24 உன்னிடம் நான் கொண்ட ஆசையை
உன்னிடம் நான் கொண்ட ஆசையை கடிதமாய் கொட்டுவேன்
வார்த்தையை மிஞ்சிடும் ஆசையை மையெனச் சொட்டுவேன்
நெஞ்சு உன்னை சுத்தியே ரெக்கை கட்டுது
கண்ணு உன்னை தேடியே சொக்கி நிக்குது
(உன்னிடம்...
சிங்கார வைர கிரீடம் நீ சூட நான் தாரேன்
ஏற்ப்பாயோ என் ராணி என் ராணி
உன் சேவைக்காக என்று ஆளாக்கி வைத்த தெய்வம்
செய்த சீரோ என் வாழ்வே
கிளிப்பிள்ளை போல நெஞ்சும் உம் பேரைச் சொல்லி சொல்லி பாட்டு பாடுது
இந்த ஜீவன் கொண்ட ஆசை கைகூடுமா என்ற எண்ணம் சேருது
தேவன் தேவி போல இல்லை என்ற போதும்
இந்த சீடன் சேவை தொடருமே
அபிராமியே என் நெஞ்சில் ஊஞ்சலாடிடும் காலமே
எந்நாளுமே புனிதமாய் போடுவாள் என் நெஞ்சில் கோலமே
பூ வாரி வாரியே காத்தும் தூவுமே
மாரி மாரியே மழை ஊத்துமே
# 23 மனது பொருந்திவிட்டால்
மனது பொருந்திவிட்டால்
உறவு சிறந்திருக்கும்
விருப்பு வெருப்பு எல்லாம்
கடந்து நிலைத்திருக்கும்
(மனது...
துறக்கச் சொல்வது வேதம்
திருந்தச் சொல்வது சமயம்
கடமையைச் சொல்வது கீதை
மூன்றையும் சொல்பவள் மனைவி
(மனது...
தனிமை காணாத உறவோ
இனிமை காணாத இரவோ
கடமை நிறைவேற்றத்தானோ
கொடுத்ததெல்லாம் கொடுத்தானோ
(மனது...
அருந்திட மருந்திடும் தேகம்
பகிர்ந்திட தெளிந்திடும் மோகம்
மணைமட்டுமா அவளாட்சி?
மனதிலுமே அரசாட்சி
பருவம் பொன்னந்தி வானோ?
குறுநகை மின்னல் தராதோ?
ஞாயிறும் திங்களும் மோதி
நல்கிய நாயகி நீயோ?
#22 பொன் காலைப் பொழுது
பொன் காலைப் பொழுது
இது ஒரு பொன் காலைப் பொழுது
சூரியத் தாய் துயிலெழுந்தாள்
வானமெங்கும் தீ சுமந்தாள்
பொன் காலைப் பொழுது
இது ஒரு பொன் காலைப் பொழுது
வானொலி விளம்பரம் காதுளைக்கும்
வாசலில் தினசரி காத்திருக்கும்
சாலையில் சிறுவர் பள்ளிசெல்ல
வாகன ஊர்வளம் படைதிரள
தூரிகையால் நாழிகையை நான் கடந்தேன்
(இது ஒரு பொன் காலைப் பொழுது...
குளியல் அரையினில் அருவி விழ
பூசை மணிகளின் ஓசை எழ
மணையில் சிலபேர் பணிபுறிய
ஊதியம் தேடி மீதி செல்ல
காலையுமே மாலையிடம் விரையாதோ
(இது ஒரு பொன் காலைப் பொழுது...
#21 சில்லரை மழையாய் குலுங்கிச் சிரிப்பாள்
சில்லரை மழையாய் குலுங்கிச் சிரிப்பாள்
கன்னக் குழிகளில் மனதை அடைப்பாள்
சந்தனச் சிலை ஒன்று வடித்தா
பிரம்மனும் உனையிங்கு படைத்தான்
மேனியே காதல் தோணியடி
வேகம் வேகம் இது வாலிப வார்த்தை தானே
மோகம் மோகம் அது உன்னைக் கண்டதும் தானே
கண்பார்த்தாய் கைகோர்த்தாய் நான் காதல் வயமானேன்
(சில்லரை...
போராடும் அலையில் சரியும் கரையாவேன் சம்மதத்தில் நிறைவாவேன்
நீராடும் பொழுதில் மேனியைப் போலாவேன் நீ ஒத்தட நீராவாய்
பூபாலம் கேட்கும் சமயம் அருகில் தினமும் இருந்துவிடு
நீலாம்பரி பாடி சுகமாய் இரவில் என்னைத் தூங்கவிடு
பூர்வீகம் கேட்டால் அருவிக்குத் தெரியாது ஒரு பிறப்பிடம் அதற்க்கேது
நம் காதலும் அதைப்போல் மூலத்தை அறியாது ஆழத்தில் குறையாது
பருவக் குகையே உன்னில் என்னை கொஞ்ச நேரம் ஒளியவிடு
பதட்டம் ஏனோ மலரில் பனிபோல் எனை கொஞ்சம் தேங்கவிடு
(சில்லரை...
#20 சந்திரன் சிரிக்கும்
சந்திரன் சிரிக்கும்
நேரம் முழுக்க
ஏங்கி கிடக்க
எனக்கேன் உறக்கம்
உன் சொல்லில் உறுதி
கண்டாள் ஒருத்தி
தந்தால் நிறுத்தி
தன்னையே பரிசா
காதுப் படிகள் இறங்கி
வார்த்தைகள் சொகுசா
வாக்குகள் வழங்க
காதலின் சபையில்
ஜோதிகள் எரிய
நெஞ்சிலே கலந்து
நிம்மதி நிலவ
தூக்கம்தான் வருமோ சகியே
(சந்திரன் சிரிக்கும். . .
உள்ளத்தில் விரிசல்
காதல் சுவையும்
கேள்விக் கணையும்
கலந்தே ஒலிக்கும்
சந்தர்ப்ப விருந்தா
காதல் மருந்தா
இளமை அருந்த
இருவர் உடந்தை
சந்தம் சொல்லையே இழக்கும்
மோகனப் பொழுதில்
ஆதவன் மறைவில்
காரியம் புரிய
மாதிரி எதற்கு
பாதைகள் வரைய
பருவம்தான்
இருக்கே துணையா
(சந்திரன் சிரிக்கும். . .
#19 சிந்தனையை மூட்டு
சிந்தனையை மூட்டு
சங்கதியைக் காட்டு
சங்கதியும் தீர்ந்தா
கற்றுக்கொள்ளு கேட்டு
பொன்னான கலையப்பா
வீணாகி வருதப்பா
கண்ணான கவிஞர்கள்
இல்லாத நிலையப்பா
பை நிறையப் பணமப்பா
பெருந்தலை கணமப்பா
வெட்கம் மானம் எல்லாமே
விற்று விட்ட கவியப்பா
தமிழ் கொலையப்பா கொலையப்பா கொலையப்பா. . .
இவன் கிண்டலுக்கு கவிஞனப்பா
காசு சில்லரைக்கு அடிமையப்பா
அன்று நல்ல கவிதானப்பா
சீரழிந்ததேனப்பா
வீராப்பாய் அழித்தது வார்த்தையின் கற்பப்பா
(சிந்தனையை மூட்டு
#18 வாசல் வெளியே கிடப்பாளே
வாசல் வெளியே கிடப்பாளே
வானவெளியில் மிதப்பாளே
வண்ணக் கோலம் தேசிய கீதம் போன்றவளா?
கண்ணைப் பறிச்சு நெஞ்சில் நிறையும் பூ மகளா?
பத்துப் பாட்டை படிச்சிருந்தாதான்
பார்க்க அழகா இருந்திருந்தாதான்
கவிதை வருமா
காதல் வருமா
இள மனம் தினம் ஏங்கிக் கெடுமா
(வாசல்...
சென்னைச் சாலைகளை பழகிய கால்கள்
சரித்திர இடங்களில் பதியட்டுமே
அண்டை நாடுகளின் அவசரக் காற்றில்
மல்லிகை முல்லை உதிரட்டுமே
நம் சொந்தத்தை
கொண்டாடவே
அந்நிய செலாவணி
இருந்தாக்கூட பத்தாதடி
பீசா கோபுரம் சாய்கின்றதேன்
கூட்டத்தில் உன்னைத் தேடிடுதோ?
என் கைகளில் சாய்ந்தாடவா
உந்தன் கூந்தலே தொங்கும் தோட்டமோ?
தாங்கிப் பிடித்திட ஆள்வேண்டுமோ?
சீனச் சுவர் போதாதம்மா
கர்த்தர் மாலை போட்டதில்லை
கந்தர் சஷ்டி கேட்டதில்லை
மண்டியிட்டும் தொழுததில்லை
உன் அன்புக்கு மட்டுமே அடிபணிவேன்
(வாசல்...
#17 பழமுதிர்ச் சோலையோ
பழமுதிர்ச் சோலையோ
மலரேந்தும் ஓடையோ
சோதனை செய்யவோ
சந்தேகம் தீருமோ
பழமுதிர்ச் சோலையோ
மலரேந்தும் ஓடையோ
மாதம் சேதம் மறுக்காதே
வருடம் தேய வருத்தாதே
குறுகுறு பார்வையில் மலர் இதழ்கள் பணிந்திட
வளர்ந்திடும் ஆசையில் என் இரவுகள் நனைந்திட
சேலை இடைவெளி இடையினில் எனக்கென இருக்கையில்
விரல்கள் பதித்துக் கரைகள் அகற்றத் தூண்டும்
(பழமுதிர்ச் சோலையோ...
பாலை மழை போல் பொழிவாயோ
வாழை உடலால் இழைவாயோ
பிறிந்திடும் பொழுதெலாம் நான் இயங்கிடும் இயந்திரம்
உன்னுடன் கலந்ததும் உயிர் சுடர்விடும் சுதந்திரம்
மாலைக் கறுக்கலும் மயக்கிட நிலவொளி சுறந்திட
இரவின் மடியில் இருவர் ஆடும் ஊஞ்சல்
(பழமுதிர்ச் சோலையோ...
#16 ரீங்காரமாய் ஓடம்
ரீங்காரமாய் ஓடம்
அலைமோதிடும் ராகம்
தொலைவினிலே
வரைபடமாய்
செந்தூரச் சூரியன்
சாயும் பொன்னான காலமே
ரீங்காரமாய்
வலை வீசும் போதும் கடல் தாய்மேல் உண்டு பாசம்
உடல் மூச்சு யாவும் அவள் போட்ட பிச்சையாகும்
மீணுக்கு வந்தது வினையானது
வலைக்குள்ளே விழுந்து நம் வாழ்வானது
வாழும் ஒன்று தேயும் ஒன்று வகுத்தான் நீதி அன்று
ரீங்காரமாய் ஓடம்
அலைமோதிடும் ராகம்
தொலைவினிலே
வரைபடமாய்
செந்தூரச் சூரியன்
சாயும் பொன்னான காலமே
#15 கார்மேகம் எறங்குமா?
ஆண்: கார்மேகம் எறங்குமா? என் சோகம் கறைக்குமா?
காத்தோட கறையாத கற்பூரம் கவலைதான் கெணத்துக்குள் தவளைதான்
பெண்: இமயம் கூட எறங்குனா ஏழை பூமி தாங்குமா?
மூழ்காதே மலர் நீர்க்குள்ளே! தாமரை கொலத்துமேல் மெதக்கத்தான்
ஆண்: தீய மூட்டுனேன் என் குளிர் காயல
முத்துக் குளிச்சவென் மூழ்கித்தான் போகுறேன்
பெண்: சோகம் இல்லாமே சொந்தந்தான் இருக்குமா
சொல்ல முடியுமா உன் புகழ் சுறுக்கமா
ஆண்: ஏகாந்த மோகத்தக் காண்காத நெஞ்சு
ஏக்கத்தின் தாக்கத்தில் பாடுதடி
பெண்: சொமைதாங்கி சாயலாமா
ஆண்: யாரடி கூறடி
பெண்: முகம் காட்டினால் உன் துயர் போகுமா
#14 பூங்காற்றில் ஜோதி
பூங்காற்றில் ஜோதி
என்னில் நீ பாதி
புயலுக்கென்ன நீதி
வீசுமோ எனை மீறி
பூங்காற்றில் ஜோதி
நாள் விரயமாய் கிடந்ததே சேரும் முன்னரே
காலத்தின் கோலத்தை கேளடி
என் இருட்டரை வானிலே வெளிச்ச ரேகையாய்
உதித்தவள் நீயடி
தலைசாயுமுன் மனம் சேர்த்திட நீ வாசப்பத்தியோ
உனை ஏந்திடும் இந்த ஆண்மகன் நிலை தேயும் வத்தியோ
வாடும் ஜோதிகள் நம்மைச் சேர்த்திட அவன் நோய் கொடுத்தானே
#13 நீ புள்ளி நான் கோடு அன்பே
நீ புள்ளி நான் கோடு அன்பே
கலந்து
வரைந்தால்தான் கோலமெனும் வாழ்வே
எறுவை உருட்டி கோலத்தின் மேல்
பூசணிப்பூ சூட்டு அழகே
புள்ளியிட்ட மான் என் வரிகளுக்கடங்கி
பள்ளிவரும் நாள் என்னாளோ
அந்தபுரத்தில் நீ வந்ததும்
தருவேன் புள்ளி விவரம் வாராயோ
சூடாகுது பள்ளம் மேடாகுது
நீ வா வா
#12 உண்மை உணர்வாளோ
உண்மை உணர்வாளோ
அவள் கோபத்தினால் முகம்
சிவக்கின்றபோதும்
உள்ளுக்குள் ரசிக்கின்றாள்
(உண்மை உணர்வாளோ
சீறிடும் பார்வை
என்னைச் சுடுகையில்
பெளர்ணமி அலையானேன்
அந்த கிளர்ச்சியின் அடிப்படை
காரணம் என்ன
காதலின் வசம்தானே
(உண்மை உணர்வாளோ
உதட்டினில் ஆசை
ஊர்வதை மறைக்க
ஆத்திரச் சாயமிட்டாள்
காதல் சாத்திர நாடக
மேடையிலே அவள்
பாத்திரம் தேடுகிறாள்
(உண்மை உணர்வாளோ
#11 கிள்ளியெரிஞ்ச முல்லை மலரின்
கிள்ளியெரிஞ்ச முல்லை மலரின்
பேருக்கு மூலம் இல்லை
காம்பின் பெயரை கண்டு பிடிச்சும்
ஒட்ட முடியவில்ல
அங்க விட்ட குறையுமில்ல
கல்லரை மலருக்கு மணமேடை எங்கே?
காகித மலருக்கு வாசனை எங்கே?
பறித்தவன் கைகளில் பூ சிரித்தாலும்
காம்பினைக் கண்டதும் கலங்குது இங்கே
கள்ளிச் செடியால் பிள்ளை உயிரை
கிள்ளலையே ஏன் ஏன்?
(கிள்ளியெரிஞ்ச...
கண்ணென்றும் இமையென்றும் போற்றிட வேண்டாம்
ஊருக்கு முன்னே சீராட்ட வேண்டாம்
மகள் என்று என்னை ஒரு முறையேனும்
அழைத்திடு தாயே அதுவே போதும்
வாசலில் வீழ்ந்த நேற்றைய சேதி
தூக்கி எரி நீ நீ
(கிள்ளியெரிஞ்ச...
#10 பல்லாக்கு போல ஒன்னோட நெனவை
பல்லாக்கு போல ஒன்னோட நெனவை
நெஞ்சோடதான் ஏந்துறேன்
பகல் சாயும் நேரம்
விடியாத மோகம்
மடியாமதானே வாட்டுது
பல்லாக்கு போல ஒன்னோட நெனவை
நெஞ்சோடதான் ஏந்துறேன்
மண்ணுக்கொரு நீரூற்றென
விண்ணுக்கொரு வைரம் என
பள்ளத்தினில் வெள்ளம்போல் வந்தாயம்மா
கத்திக் கதற
ஆள் இல்லையே
கொஞ்சிக் குலவ
நீ இல்லையே
பித்தம் அது நித்தம் வரும்
உன் ஞாபகம்
கனவோடு நின்றால் தாங்காது கண்ணே
களவாடிச் சென்றான் உன் காலம் முன்னே
காத்தோட போச்சு கடன்வாங்கும் மூச்சு
#9 காதலின் வாகனம்
காதலின் வாகனம்
கண்களே ஆகிடும்
வழி பார்ப்பதும்
துயில் தோர்ப்பதும்
காதல் செய்வதா
சொல்லுங்களே கண்களே
காதலின் வாகனம்
கண்களே ஆகிடும்
தினமும் தினமும்
பெருகும் பருகும் விரகம்
கலைப்பூட்டும் மஞ்சம் வேண்டும்
இளைப்பாற நெஞ்சம் வேண்டும்
தொடுவது காதல் குற்றமா
விழிவாசல் ஏக்கத்திலும்
மணக்கோலம் தூக்கத்திலும்
வரைகின்றதே காதலின் சாத்திரம்
வழி பார்ப்பதும்
துயில் தோர்ப்பதும்
காதல் செய்வதா
சொல்லுங்களே கண்களே
#8 மழைச்சாரல் சல சல சலவென
மழைச்சாரல் சல சல சலவென
உடல்களை நனைக்குது
திரு திரு விழிகள்
தீண்ட பார்க்குது
வெகு நாட்கள் பொரு பொரு பொரு என்ற
ஆசைகள் விடுபட
அனைகலும் சரிந்திட
உன்னைத் தந்திடு
உந்தன் பேர் பேரல்ல
எந்தன் மந்திரச் சொல்
கட்டிப்போட்டுவிட்டேன்
உன்னைக் கண் இமைக்குள்
(மழைச்சாரல். . .
புது காதல் மயக்கம் குடியேறும்
மொழி மாதம் தேதி மறந்துபோகும்
ஓர் சொல்லில் தங்கிடும் இசைத் தகடு
உன் பேச்சே பேசிடும் என் உதடு
மழைச்சாரல் தாங்காத பூமி
பெருமூச்சு விடத்தானோ ஆவி
வானத்தின் மோனத்தின் கோலத்தை
உள்ளத்தில் தைத்திட்ட உன் வித்தை போற்றவா
(மழைச்சாரல். . .
#7 தித்திப்பாய் பார்ப்பாய்
பெண்:
தித்திப்பாய் பார்ப்பாய்
தீப்பிழம்பாய் நான் எரிய
ரெட்டிப்பாய் ஆகிடுமே
என் சுவையும் நீ சிரித்தால்
ஆண்:
உறவுப்பாய் விரித்தாலும்
கவனிப்பாய் அரவணைப்பாய்
வெதவெதப்பாய் நான் இருக்க
கொஞ்சம் வந்து தீயனைப்பாய்
பெண்:
இரவெல்லாம் கண்விழிப்பாய்
பகலெல்லாம் நினைவிழப்பாய்
ஆசையெனும் தீ வளர்ப்பாய்
அலை கடல் போலே தத்தலிப்பாய்
(தித்திப்பாய்
ஆண்:
வானமெல்லாம் மிதப்பாயோ
போட்டிக்கு நிலவை அழைப்பாயோ
கண் சிமிட்டி கலிப்பாயோ
நட்சத்திரமே நகைப்பாயோ
பெண்:
எண்ணமெலாம் சேகரிப்பாய்
கவிதைகளாய் நீ வடிப்பாய்
உள்ளத்திலே இடம் பிடிப்பாய்
உன்னது என்று கணக்கெடுப்பாய்
(தித்திப்பாய்
ஆண்:
கவலையெல்லாம் துறப்பாயோ
காதலிலே திலைப்பாயோ
இதழை இதழால் பறிப்பாயோ
இன்னும் என்னை மறுப்பாயோ
பெண்:
கொடுத்ததெல்லாம் அனுபவிப்பாய்
மேலும் மேலும் கேட்டிருப்பாய்
உன் விடையில் என் விடை ஒளிப்பாய்
என்னை என்று கை பிடிப்பாய்
(தித்திப்பாய்
# 6 கடந்து போகும் நொடிகளிலே
கடந்து போகும் நொடிகளிலே
நினைவாகும் சில கனங்கள்
சில கனங்கள் அகற்றிவிட்டால்
மனமெங்கும் வெற்றிடங்கள்
வெற்றிடங்கள் வாழ்வுபெற
வாலிபத்தின் வைபவங்கள்
வைபவங்கள் நிறைவுபெற
சந்தர்ப்பம் சூழ்நிலைகள்
சூழ்நிலைகள் அமைந்திடுமுன்
இடைமறிக்கும் விதிமுறைகள்
விதிமுறைகள் வழிவகுத்தால்
சரணடையும் சுதந்திரங்கள்
சுதந்திரங்கள் பறிகொடுத்தால்
கால்நடைபோல் மனிதர்கள்
மனிதர்கள் சீர்பெறவே
சமநிலைகள் வரவழைப்போம்
வரவழைப்போம் புரட்சியிங்கே
சொன்னவர்கள் கல்லரையில்
கல்லரையில் கதை முடிந்தும்
நினைவெழுதும் புது வரிகள்
#5 மண்ணுக்கு வேர் உறவு
மண்ணுக்கு வேர் உறவு
முகிலுக்கு நீர் உறவு
மலருக்கு வண்டுறவு
மனதுக்கு நீ உறவு
(மண்ணுக்கு…
புல் மீது பனி உறவு
படகுக்கு கடலுறவு
வானோடு மதி உறவு
வாழ்வோடு விதி உறவு
காதலுக்குக் கண் உறவு
கவிதைக்குப் பெண் உறவு
சிலையோடு உளி உறவு
சிதை மீது தீ உறவு
(மண்ணுக்கு…
நாணலிடம் நதி கொள்ளும்
நிலைமாற்றும் ஓர் உறவு
நாணத்துடன் ஆசையிடும்
போர்தானே ஊடுறவு
மலை மீது மூடுபனி
தலைகோதல் ஓர் உறவு
மடியாததொன்று என்றும்
மணமான நம் உறவு
(மண்ணுக்கு…
#4 காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காணச் சுவையே இயற்கையே அழியா கலையே
சாலை முழுதும் பெருகி வரும் சேலை நதியே
நீந்திக் குளித்தால் அதுவும் இயற்கை நிலையே
எனை மயக்கும்
காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காணச் சுவையே இயற்கையே அழியா கலையே
-----------
சிந்தும் மழைத் துளி கவிதை வரிகளோ
மேகம் பூமிக்கு எழுதிய மொழிகளோ
------------
சிந்தும் மழைத் துளி கவிதை வரிகளோ
மேகம் பூமிக்கு எழுதிய மொழிகளோ
வளைந்திடும் வானவில்லின் அம்பை அறிவாயோ
அலைந்திடும் மேகக்கூட்டின் எல்லை அறிவாயோ
பார்த்ததும் காதல் வந்தால் அனுமதிப்பாயோ
ஒரு புது யுகம் மலருது கவனத்தை கவருது
காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காணச் சுவையே இயற்கையே அழியா கலையே
-----------
சிந்தும் மழைத் துளி கவிதை வரிகளோ
மேகம் பூமிக்கு எழுதிய மொழிகளோ
------------
சிந்தும் மழைத் துளி கவிதை வரிகளோ
மேகம் பூமிக்கு எழுதிய மொழிகளோ
இயற்கையே காதல் கொள்ள நீயும் பிறந்தாயோ
இயற்கையே காதல் கொள்ள நீயும் பிறந்தாயோ
உனைத் தொட காமன் வந்தால் அனுமதிப்பாயோ
ஒரு புது யுகம் மலருது கவனத்தை கவருது
காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காணச் சுவையே இயற்கையே அழியா கலையே
சாலை முழுதும் பெருகி வரும் சேலை நதியே
நீந்திக் குளித்தால் அதுவும் இயற்கை நிலையே
எனை மயக்கும்
காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காணச் சுவையே இயற்கையே அழியா கலையே
# 3 memories வாத்திய இசைக்கு வடித்த பாடல்
பாடல் தலைப்பை அழுத்தினால், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்தின் இணையத் தளத்தில் இந்தப் பாடலை என்னுள் பிரசவித்த வாத்திய இசைஅடங்கிய பகுதிக்கு கொண்டு செல்லும்!
காலேஜு வாசல் காம்பௌன்ட் சுவரில்
அமர்ந்திருப்போம்
ஏய் நினைவிருக்கா?
கன்னியர்கள் கூட்டம் ரெண்டு மணியாட்டம்
நினைவிருக்கா?
ஏய் நினைவிருக்கா?
காப்பி சிகரெட்டு
சில்லரைக்கு வேட்டு
பொட்டிகடை பூராம்
உம் பேருக்கு ஒரு சீட்டு
காலேஜு வாசல் காம்பௌன்ட் சுவரில்
அமர்ந்திருப்போம்
ஏய் நினைவிருக்கா?...
இளமை
-----------
பேருந்தில் தாவி
ஒரு கய்யில் ஏரி
உள்ளிருக்கும் சேலை நதியில்
பார்வையால் நீந்தி...
நெஞ்ஜில் சுவை தேங்க
காதல் சின்னம் தாங்கி
மன்மதனை தோர்கடித்து
போசு கொடுத்தே
பவனி வருவோம்
நினைவு இருக்கா?
பவனி வருவோம்
நினைவு இருக்கா?
அந்த நாட்களோடு
ஈடினை இல்லை
இன்று நாமோ
கடமையின் பிள்ளை
காலேஜு வாசல் காம்பௌன்ட் சுவரில்
அமர்ந்திருப்போம்
ஏய் நினைவிருக்கா?
கன்னியர்கள் கூட்டம் ரெண்டு மணியாட்டம்
நினைவிருக்கா?
ஏய் நினைவிருக்கா?
இளமை
---------
படிப்பதற்க்கு கூடி
பாட்டுக்களைப் பாடி
சாலைகளை அளந்தோம்
வாதங்களில் புகுந்தோம்
-----------
விளக்கில் மொட்டை மாடி
இரவுக்கொரு ஜோடி
பருவமெனும் பாடம் பயின்று
படித்து முடித்தே
பவனி வருவோம்
நினைவு இருக்கா?
பவனி வருவோம்
நினைவு இருக்கா?
அந்த நாட்களோடு
ஈடினை இல்லை
இன்று நாமோ
கடமையின் பிள்ளை
காலேஜு வாசல் காம்பௌன்ட் சுவரில்
அமர்ந்திருப்போம்
ஏய் நினைவிருக்கா?
கன்னியர்கள் கூட்டம் ரெண்டு மணியாட்டம்
நினைவிருக்கா?
ஏய் நினைவிருக்கா?
காப்பி சிகரெட்டு
சில்லரைக்கு வேட்டு
பொட்டிகடை பூராம்
உம் பேருக்கு ஒரு சீட்டு
காலேஜு வாசல் காம்பௌன்ட் சுவரில்
அமர்ந்திருப்போம்
ஏய் நினைவிருக்கா?...
இளமை
#2 தென்னை சாய்வதும் ஏன்
தென்னை சாய்வதும் ஏன்
உன் தோற்றம் வணங்கிடவோ?
அலைகள் தோய்வதும் ஏன்
உன் பாதம் தொழுதிடவோ?
வார்த்தைகளாலே மயக்கிடத்தானா என்னை வரவழைத்தாய்
வார்த்தைகள் மீதே காதல் கொண்டேனே உன்னை பார்த்ததில்தான் உன்னைப் பார்த்ததில்தான்
வானவில் வீசிய
வாசனை அம்பு மடிமேல் வீழ்ந்ததிங்கே மடிமேல் வீழ்ந்ததிங்கே
கதிரை வடித்து பனியுள் ஒளித்து
ஒத்தடம் செய்வதுபோல்
உந்தன் சுக உறவே
காகித ஓலை கண்களுக்குள்ளே
கனவலை அடிக்கிறதே?
விளக்குக் கூண்டாய் உன் நினைவாக
படகாய் ஆனேனே
தனிமையில்தானே உணரவந்தேனே
தனிமையில்தானே உணரவந்தேனே
உலகத்தில் என் நிலையை
ஆகா, எந்தன் உலகினையே
Song #1 இது மார்கழியின் அனல்காற்று
#1
இது மார்கழியின் அனல்காற்று
இது நாத்திகனின் திருநீரு
இது வெளிச்சமில்லா சூரியன்
ஓர் அனாதையின் பெயர்சூட்டு
மீணில்லாத குலத்தில் சென்று
தூண்டிலை நான் வீசினேன்
வீடில்லாத நிலத்தில் நின்று
வெண்சுவரை எழுப்பினேன்
நிறமில்லாத வானவில் ஒன்றை
நடுநிசியில் பார்க்கிறேன்
குற்றமில்லா தண்டனையாய்
காதலை நான் சுமக்கிறேன்
Tuesday, April 06, 2004
பேத்தல்
வேர் ஊன்றியிருக்கும்
நம் குணங்களில்
மன நிலை எனும் கட்டுக்கடங்காத காட்டாறு
இழுத்துச் செல்லும் இடமெல்லாம்
நம் கணிப்புக்கு அப்பாற்ப்பட்டது
இந்தச் சிக்களில்
காலத்தின் மன நிலையும்
கைகோர்த்து சுழற்றிவிடும்
இப்படி இனம் புரியாதவைகளின்
இயக்கத்தால் அலைக்கழிக்கப்படும்
மனிதன்
எத்தனை குருட்டு கர்வம் இருந்தால்
தன்னைத் தானே இயக்குவதாய்
நினைத்து,
வாழ்க்கைக்கு வழிவகுத்து,
பிறர்க்கு வழி காட்டி,
தான் பெரிதாக
சாதித்துவிட்டதைப் போல்
தனக்குப் பின்
சந்ததிகளை வேறு
விட்டுச் செல்கிறான்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
பருவம்
கொட்டிவிடும் ஆசை
குவிந்து கிடக்க
பெற்றுவிடும் ஆர்வம்
பெருகி நிற்க
கண்களால் துழாவி
காயம் செய்து
ஆசையென்னும் சீழ் கசிய
நெஞ்சுறுத்தும் குற்ற உணர்ச்சி
பசை இழந்து
புதைமணலாய் சரிய...
அச்சாணி கழண்ற
அதிவேகச் சக்கரங்கள்
ஓடையில் வீழ்ந்து இளைப்பாரிட...
பாதை மாறியதைப்பற்றி
தலைகுனியுமா
அல்லது வேகம் நிறைவேற்றிய
தணிப்பில் திளைக்குமா?
பருவக் கோளாறு என்று
பிதற்றுவது
படைத்தவனின்
கவனக்குறைவிற்குச் சப்பைக்கட்டு
எதிர்காலம்
பனி இதழ்களாய் பிரகாசிக்கும்
பூக்களைக் கிள்ளி
சந்தர்ப்ப நாயகனான
எவனோ ஒருவனின் பாத காணிக்கையாக்க
கூடைகளில் அள்ளும் குணம்
நமக்கு
நம் இனத்தின் எதிர்காலம்
என்னவாக இருக்குமாம்?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
ஏக்கம்
கொட்டாங்குச்சி வயலினோட
நய்யாண்டி சத்தம்
சந்தைக் கடையோரம்...
மணக்க மணக்க
சந்தனமும்
சரம் சரமா
முத்து முத்தா
இப்பத்தான் பூத்த
மல்லிகப்பூ
கோவில் வாசல்ல...
ஆத்துல இருந்து
ரவிக்கையில்லாத புடவையோட கிழவிங்க
அடுக்கடுக்கா
தண்ணிக் குடம் சுமந்து
சிணுங்கிச் சிணுங்கி
நடக்க,
அவங்க காதைக் கிழிச்சு
சைக்கிள் டய்னமோ
கணக்கா தொங்குற
தங்க தொங்கட்டான்...
அச்சாணி கழண்டிடுமான்னு
தவிக்கவெக்கும்
மாட்டுவண்டிச் சக்கரம்...
சேவல் கொண்டைவால் துருத்தியமாதிரி
கித்தாப்பா ஒரு தலைப்பாகட்டு
போட்டுகிட்டு
கால் விரலாலையும்
மடங்குன நாக்கில இருந்து
கிலிட்ச் கிலிட்ச் சத்தத்திலையும்
மாட்ட விரட்டி
ரோட்டுல இருக்குற மேடு பள்ளம் எல்லாத்திலையும்
ஒரே வேகத்தில வண்டிய
ஏறி எறங்கவெச்சு
பாட்டி வீட்டுல சேத்துட்டு
வண்டிக்காரப் பழனி
வெத்தலக்காவி பல்லு நெறய சிரிச்சு
கேக்குது,
"மெட்ராசு தம்பி, உங்க ஊர்ல
இம்புட்டு சொகமா சவாரி கெடைக்குமா?"
"எங்க ஊருல இதுக்கெல்லம் குடுத்து
வெக்கலைய்யா"
Monday, April 05, 2004
அடிப்படை
பாசத்தின் அடிப்படை அன்பு
அன்பின் அடிப்படை உறவு
உறவின் அடிப்படை சொந்தம்
சொந்தத்தின் அடிப்படை ரத்தம்
ரத்தத்தின் அடிப்படை பிறப்பு
பிறப்பின் அடிப்படை சேர்க்கை
சேர்க்கையின் அடிப்படை வசீகரம்
வசீகரத்தின் அடிப்படை தேவை
தேவையின் அடிப்படை இயற்கை
இயற்கையின் அடிப்படை இயல்பு
இயல்பின் அடிப்படை?
கவரியைக் கவரிட
பூக்களை மோதி மனம் சிந்தி
தபலாவின் நீரோட்டத்தில்
கால் நனைத்து
குழலின் துவாரங்களில் ஒளிந்து விளையாடி
தம்புராவின் கைகளால் தன் நாடி பார்த்து
சாரங்கியின் மயக்க ஊசியில்
கிறங்கி
சலங்கையின் பூஜை மணிக்கு வணங்கி
பார்வையாலரின் கைத்தட்டலில் குடிபுகுந்து
தன்னைத் தானே பல வகையாய் வழங்கி
பெற்றுக்கொள்ளும் காற்றே
உன்னைப் புகழ் பாட
உன் தயவே வேண்டாமென்று
மெளனமாய் எழுதுகிறேன்
படித்துக்கொள்
உச்சி முதல் பாதம் வரை
கார் மேகம் கூட்டம் சேர்ப்பது
உன் கூந்தலிடம் எண்ணை கொண்டாடும்
அன்னியோன்யத்தை அழித்திடத்தானே?
அனையாத அடுப்பாய் அடிவானம் பொருமும்
உன் முக ஜோதிக்கு முன்
அது அன்றாடம் காய்ச்சிதானே?
கண்ணுக்கு மை அழகாம்
பிறரை கொந்தளிக்கவைக்கும்
குளிர் தெப்பங்களைச் சுற்றி
எச்சரிக்கை கோடு அழகா?
கண்களையாவது அனுமதியேன்
கோடு தாண்ட
இருபது ரோஜா இதழ்களை
அடுக்கி மேலும் கீழும் வைத்து
புன் முருவல் இம்சையை இடையில் வைத்து
அதென்ன கருவியோ உன் உதடுகள்
என் உடலின் ஈரம் அனைத்தும்
சுருக்கி என் நாவில்
ஆசை ஊற்றெடுக்க வைக்கிறது
கழுத்தின் அம்சமென்ன
கேட்க வேண்டுமா?
ஒரு சொர்கத்தை விட்டு
மறு சொர்க்கம் கூட்டிச் செல்லும்
சறுக்குமரமாயிற்றே அது
நிறை குடம் தலும்பாதாம்
எங்கே உன் ஒரு கை அனைப்பில்
இடுப்பு ஏறச்சொல்
பார்ப்போம் அதன் குனத்தை
சிந்திவிடும் அதன் சங்கதி
கொலுசு மணிகள் கைகோர்த்துச்
சினுங்குவது
உன் கனுக்கால் மேல் உறசி
உறவாடத்தானே?
உதிர் இலைகளின் சலசலப்பு
உன் பாத மிதி பட்டு
மரணிக்கத் தானே?
பாதத்துடன் முடிந்தது
உன் உருவம்
அதன் சுவடுகளில்
படர்ந்திடும் என் பருவம்
புதுயுகப் பிரசவம்
இருட்டை எதிர்த்து
மோதி
பிரகாசித்து
சில நொடிகளில்
மடியும்
தீக்குச்சி தீபங்கள்போல்
உண்மை
அவ்வப்பொழுது உலவாலியென
உருவெடுத்து உதிரும்,
பாசாங்கு உலகின்
பரிமாறல்களில்
இந்த தற்காலிக
தீபங்களின் ஒளியைச்
சேகரித்து சொந்தமாக
ஒரு சூரியன் செய்து
ஒரு அமாவாசை இரவில்
பட்டமெனத் திரித்து
வானமேற்றினால்…
காலம் நேரம்
சந்தர்ப்பம் சூழ்நிலை
என்று கைகோர்த்து நிற்கும்
நியதிகளின் விதிமுறைகள்
சிதறிடும்.
பிறகு தொடங்கத்தானே வேண்டும்
புது யுகம்?
