உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 06, 2004
ஏக்கம்
கொட்டாங்குச்சி வயலினோட
நய்யாண்டி சத்தம்
சந்தைக் கடையோரம்...
மணக்க மணக்க
சந்தனமும்
சரம் சரமா
முத்து முத்தா
இப்பத்தான் பூத்த
மல்லிகப்பூ
கோவில் வாசல்ல...
ஆத்துல இருந்து
ரவிக்கையில்லாத புடவையோட கிழவிங்க
அடுக்கடுக்கா
தண்ணிக் குடம் சுமந்து
சிணுங்கிச் சிணுங்கி
நடக்க,
அவங்க காதைக் கிழிச்சு
சைக்கிள் டய்னமோ
கணக்கா தொங்குற
தங்க தொங்கட்டான்...
அச்சாணி கழண்டிடுமான்னு
தவிக்கவெக்கும்
மாட்டுவண்டிச் சக்கரம்...
சேவல் கொண்டைவால் துருத்தியமாதிரி
கித்தாப்பா ஒரு தலைப்பாகட்டு
போட்டுகிட்டு
கால் விரலாலையும்
மடங்குன நாக்கில இருந்து
கிலிட்ச் கிலிட்ச் சத்தத்திலையும்
மாட்ட விரட்டி
ரோட்டுல இருக்குற மேடு பள்ளம் எல்லாத்திலையும்
ஒரே வேகத்தில வண்டிய
ஏறி எறங்கவெச்சு
பாட்டி வீட்டுல சேத்துட்டு
வண்டிக்காரப் பழனி
வெத்தலக்காவி பல்லு நெறய சிரிச்சு
கேக்குது,
"மெட்ராசு தம்பி, உங்க ஊர்ல
இம்புட்டு சொகமா சவாரி கெடைக்குமா?"
"எங்க ஊருல இதுக்கெல்லம் குடுத்து
வெக்கலைய்யா"
Comments:
Post a Comment
