<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, February 09, 2006
 
# 187 தனிமை
தனிமை ஒரு சாபமோ?
அதுவே மெய் நிலையோ?

பிறவியே நம் சம்மதத்தை
பொருத்ததில்லையே
இணைந்திருந்த இருவரால்
நாம் நிகழ்ந்த நியதியே

அலை போலக் காலம் பாய்ந்து பணியுதே
உடலோடு உள்ளம் வேடம் மாறுதே

தனித்த தேவை, வித்தை, வேலை,
வாழ்கைத் தோழர்கள்
என்று சேர்க்கிறோம் தனிமை ஏய்க்கிறோம்
முடிந்தவரை

தனிமை ஒரு சாபமோ?
அதுவே மெய் நிலையோ?

கடிகார முட்கள் பல கடந்த காயத்தில்
நம் சாயம் வெளுப்பதும் ஞானம் பூப்பதும்
முடிவின் ஓரத்தில் பயண தூரத்தில்
பயன் எவர்க்கு?

உறவுப்பூக்களே மடிந்து மலர்ந்திட
கணக்கில் வேற்றுமை இருக்கும் வாழ்க்கையில்
தனிமை ஒன்றுதான் உறுதி

தனிமை ஒரு சாபமோ?
அதுவே மெய் நிலையோ?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com