<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, February 26, 2006
 
# 189 செந்தாமரை செண்டைப்போல
பல்லவி:

M: செந்தாமரை செண்டைப்போல சூரியன் அங்கே சரிகிறதே மின்மினிகள் ஒளியில் இளகி வைரக் கோடாய் மழை வருதே

F: ஏனிந்த நிலையிது உனக்கு புரிகிறதா?

M: நாமிங்கே கூடும் நேரம் ஒளியோடு வெப்பம் ஓடும்

F: ஏனோ நாம் இனைவதில் இந்த இயற்கையும் ஆர்வம் காட்டிடுதே

M: விழா காலம் இன்றேதானடி... விளக்கங்கள் கண்ணில் பாரடி

(செந்தாமரை...

சரணம் 1:

M: கறைந்திடும் பொழுதை நினைவென தொடுத்தாய்

F: அள்ளாத சுவைகளும் இருக்காதா - இங்கு தெம்மாங்கு தமிழாய் மணக்காதா?

M: காதலியென்றே நான் உறவாட காவியப் பெண்ணாய் நீ புலனாக

F: சிந்தை எங்கும் சிந்தைப் பாடும் விந்தை உனது உனது உனது உனது உனது

M: கங்கை முங்கும் எந்தன் தனிமை புனித உறவில் கறைந்து கறைந்து குறையட்டுமே...

சரணம் 2:

F: வாலிபத் தோள்களிலே நகம் கிள்ளி வளையை உடைத்ததெந்த விடை சொல்லி

M: காற்றில் மிதந்து வரும் புது லகரி கண்களில் வீசி வரும் தென் கவரி

F: உந்தன் எண்ணம் எந்தன் மனதில் வளர வளர வளர வளர வளர

M: எந்தன் சின்னம் காதல் போரில் கனிய கனிய காதல் இங்கு மலரட்டுமே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com