உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 09, 2004
# 36 புல்வெளியில் பெண்மை
ஆண்:
புல்வெளியில் பெண்மை
உள்ளமெல்லாம் மென்மை
முன் வந்த நிலவினில்
கண் படவே இல்லை
காண்பதெல்லாம் உன்னை
பெண்:
வருகை தந்ததென்ன நீயும்
வந்த நோக்கம் என்ன?
அல்லி மலர்ந்திடும் நேரம் பார்த்து
கிள்ளி நுகர்ந்திடவோ?
(புல்வெளியில்...
பெண்:
அகன்ற தோள்கள்
அழைக்கும் கண்கள்
அரசன் அவன் நடக்க
ஆண்:
ஓடை நீரில் மிதக்கும் மலர்போல்
கன்னி படர்ந்திருக்க
பெண்:
நிகழப் போவதென்ன?
நிகழ வேண்டிக் கிடப்பதென்ன?
ஆண்:
உணர்ச்சிக் கடலில் பொங்கும் அலையை
கிளரும் பருவம் மெல்ல
(புல்வெளியில்...
பெண்:
வேடன் விழியில்
வேட்டைப் பொருள் நான்
விரும்பி வழங்கிடத்தான்
ஆண்:
அடையும் சுகத்தில் ஆணின் பங்கு
பாதி சதவிகிதம்
பெண்:
குற்றம் புரியுமுன்னே
என் மேல் குற்றம் சாட்டுவதோ?
ஆண்:
கூடி மகிழ்வதில் குற்றம் இருந்தால்
காதல் சிறை படுத்து
(புல்வெளியில்...
