உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, October 11, 2005
# 174 வேற்றுமைகள்
நிழல் தேடும் நெஞ்சை
நெருப்பு குளிப்பாட்ட,
பனியின் பரவச இதழ்
சுடும் மேனியில் சிளிர்ப்பூட்ட,
ஊசி மழை நிலத்தைத் தைக்க,
கறையும் மணல் குழி பறிக்க,
பனிமலை சறிய,
பள்ளத்தாக்கு நிமிர...
ஒற்றுமையின் அம்சத்தை
போதிக்கும் உலகம்
வேற்றுமைகளின் தீவிர
உறவை தெரிந்திருக்க
ஞாயமில்லை
