உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, November 05, 2005
# 180 நித்திரையின் நிழல்
சூராவளி சூரையாடும்
ஒரு பக்கம்
வெள்ளம் கொல்லும்
ஒரு பக்கம்
அனுதாபம் அஞ்சலில்
அதர்மம் தந்தியில்
நித்திரையின் நிழல் நாங்கள்
நட்சத்திரங்களும் நகைக்கும்
எங்கள் பாட்டை
நிலவும் காட்டும்
புறமுதுகை
எங்கள் வருகையைப் பார்த்து
விடியலும் பின் தங்கும்
ஈர விழிகளைப் பார்த்து
முகிலும் காயும்
மின்னல் எக்களிக்கும்
இடி கொக்கரிக்கும்
முறையிடப் போன கோவிலில்
மணியில்லை
குறைகளைக் கொட்டிட
வானவெளியில்கூட இடமில்லை
இயற்கை அல்ல
ஏளனத்தின் குழந்தைகள்
நாங்கள்
எச்சரிக்கையின்றி தாக்கும்
பிணப் பிச்சைக்காரியின் பெயர்
இயற்கை அன்னையாம்!
வெட்கக்கேடு
Friday, November 04, 2005
# 179 தீக்குளிப்பு
விலகாதோ மேகம்
மிளிராதோ வானம்
விடிவில்லை விறகைக் கொடு
புலராதோ பாதை
எரிந்தாளே சீதை
எமனே உன் ஆட்சி விடு
பூ முடிந்தவள்
தீக் குளிக்கிறாள்
இதைப் பார்த்தா நானும் வாழ்கிறேன்?
புத்தனும் எதிர்பார்க்காத ஞானம்
சென்றவரின் நினைவில் கூடும்
தத்துவங்கள் இழப்பின் விருதுகள்
விரைந்தோடும் வாழ்வின்
வேகத்தில் கறையும் என்று
துக்கத்தை தோளிலேற்றினேன்
பாரத்தில் நான் மூழ்கவா?
காலத்தால் சுமை இலகவா?
முடிவுக்கோட்டில் கேட்டால்
தேர்ந்தது யார் தெரியும்
Monday, October 31, 2005
# 178 கேளடா கேசவா
கேளடா
கேசவா
கூடலில் உன்வழி போகவா?
நீ செய்தால்
லீலையா
நான் அதை செய்வதால் பாவியா?
கேளடா...
நானுமே ராமனாய்
வாழவே பார்க்கிறேன் தோல்வியே
சீதையைத் தேடையில்
கோகுலம் தூண்டிட நோகிறேன்
நன்னெறிப் போர்வையில்
ராமன் ஆனாய்
ஆசைப்பெண் இணங்க
கண்ணன் ஆனாய்
உனக்கென்னய்யா
நீ உருமாறூவாஇ
எனக்கில்லையே
சுக அவதாரங்கள்
சுக நிலை இங்கு நான் கான...வழி சொல்லுவாய்
(கேளடா...
நெஞ்சிலே நேர்ந்திடும்
சஞ்சலம் யார்செயல் கூறடா
ஆசையை கூட்டினாய்
மயங்கினால் முறைகெடலாகுமா?
இரு பட்சிக்கா
இந்த உறவுக் கூடு?
பிறர் சம்மதம்
கொண்டு இணைந்தால் போச்சு?
ஆசைக் கடலுக்கு பங்காளி பலராகுமே!
(கேளடா...
