உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, January 28, 2006
# 186 நெய்தல்
பகற்பொழுதெல்லாம்
உன்னைப் பகைக்கிறேன்
அந்தி இருளாது
உன் பந்தி விரியாது
கருத்து வேறுபாடு என்றில்லை
கடமை என்று
உழுது வருகிறேன்
காரியாலயக் கரிசல்காட்டில்
மேய்ப்பாளனின் கோட்பாடுகளை
மொழிதிருத்தல் என் வேலை
கணினியில் கவிதை பெற
சிந்தனை சீறினாலும்
கைத்தெறித் தட்டச்சில்
பா ஆடை நெய்திட
காலம் வரவில்லை தற்பொழுது
உறவு, உணவு, உறக்கம்
என்று ஒன்றுடன் ஒன்று
ஓடி வர
இல்லரம்தான் இப்பொழுது;
உறக்கத்தை மட்டும்
துறத்தி விட்டு
மற்றவைக்கு மனமுவக்கும்
இரவு இறுதியில் திரை இறங்கி
பிறரையெல்லாம் போர்த்திவிட
கற்பனைக் கூடாரம்
குவிந்து எழும்
