உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 01, 2004
# 107 அராஜகம்
மண்ணுரிமையிலும் மத உரிமையிலும்
போர் தொடுக்கும் மானிடரே
சேகரிப்பெல்லாம் அதிகரித்ததா
பாதுகாப்பு தரும் அமைதியினை?
படைத்தவன் பேரில் பாசாங்கு
கிடைத்தவர் பேரில் பாசாங்கு
ஆதிக்க உணர்வின் அடிப்படைக் குற்றம்
அடுத்தவர் கீழென எண்ணுவதே
அராஜகத்தின் அடுத்த குற்றம்
வழிகாட்டியாய் தனை எண்ணுவதே
கோபுரமெங்கும் குழல் விளக்கு
இருண்ட பின்னும் ஜொலிக்கிறது
குடிசைக்குள்ளே விறகடுப்பு
பற்றாமலே இருக்கிறது
இங்கு தேவையை மீறி வாழ்வதனால்
அங்கு தேவைகள் கூட ஆசைகளே
# 106 அச்சம் களை
அச்சம் களை
அடக்கம் நிலை
அர்த்தம் களை
அறிவு நிலை
தூக்கம் களை
ஊக்கம் நிலை
துக்கம் களை
தீர்க்க நிலை
நோக்கம் களை
உலவு நிலை
ஏக்கம் களை
மோட்ச நிலை
ஆசை களை
அர்த்த நிலை
ஆடை களை
அன்பு நிலை
வெட்கம் களை
வேட்கை நிலை
வேடம் களை
வேத நிலை
உறவு களை
துறவு நிலை
உண்மை களை
இருளே நிலை
அடக்கம் களை
அழிவு நிலை
அறிவு களை
சறிவு நிலை
முத்தம் களை
பித்தம் நிலை
மோகம் களை
சோகம் நிலை
கனவைக் களை
கடினம் நிலை
கலையைக் களை
வெறுமை நிலை
உலகம் களை
கலகம் நிலை
உனையே களை
உயர்வாய் நிலை
# 105 மந்தாகினி
வாலிபத் தோட்டத்திற்கழைத்த
முதல் குரல் மந்தாகினி
கணிதம் புகட்டும் உன் இல்லம் அடைந்த
ஒவ்வொரு திங்களும் பெளர்ணமி எனது
ஈரெட்டு பொல்லாத வயதே, வயதே
ஈரெட்டு பொல்லாத வயதே
வாலிபத் தோட்டத்திற்கழைத்த
முதல் குரல் மந்தாகினி
இலக்கணப் பிழை அது உறவெனும் வகுப்பிலே
ஆசிரியையின் மேல் என் ஆசை
உணர்ச்சியின் விதையே நடைமுறைப் பகையே
காதல்மடல் கொடுத்தேன் திருத்திக் கிழித்தாய்
என் கணக்கே தவரானதே
கேரள மலர் நீ, கிருத்தவ மதம் நீ,
எனைவிட வயதும் எத்தனையோ
இளம் வயது...இளம் வயது
இதற்கா தயங்கும்?
தனைச் சுற்றியே இளம்
சிந்தனை சுழலும்
முதிர்ந்த பின்னாலும் அசைபோடும்...ஆ
வாலிபத் தோட்டத்திற்கழைத்த
முதல் குரல் மந்தாகினி
# 104 மேலே
மேலே...முகிலுக்கும் மேலே பறந்திடும் நிலையே
பருந்துக்கும் இது தூரமே
புஷ்ப விமானம் தோற்குமே
ஆளறவம் ஏதுமின்றி வானவெளியில் நீந்துமே
வகுப்பரைபோல் அமருகிறோம்
விருந்தினர் போல் உண்ணுகிறோம்
இயற்கையின் பல அழைப்புகளை வரிசைப்படி ஏற்க்கிறோம்
விரிந்திருக்கும் வானிலும் இடைஞ்சலுண்டு
இடநெறுக்கடி மனிதனின் அவல நிலை
கடல் கடந்திட திறமை நிறைய உண்டு
கால் நீட்டிட வழிகளில்லை
உடல் மேலே சென்றும்
மாறாது இந்த மனிதன் கதை
ஒரே பயணம் என்றும்
வசதிக்கேற்ற வாடிக்கை
சொர்கத்தில் பறந்தாலும்
ஏற்ற தாழ்வு மறைவதில்லை
சரிசம நிலை இருப்பதில்லை வேறுபாடு தொடர்கிறது
மனதளவில் குகைமனிதன் மாற்றமெலாம் தோற்றம்தான்
# 103 விஸ்வநாதனுக்கு என் வார்த்தை விசில்
மனதிலே குதூகலம் உனதிசை கேட்டு
உணர்வெலாம் உவமையாய் ஒலித்திடும் பாட்டு
சொந்த மண்ணின் ராகங்கள்
சொர்க வாசல் காட்டிடும்
தூர தேச வாத்தியம்
தாய்மொழிக்குப் பாயிடும்
மனதிலே குதூகலம் உனதிசை கேட்டு
மொட்டவிழ்த்த பந்தல்போல்
மெட்டவிழ்த்த மாயனே
ஏழு சுர எளிமையில்
ஏழு லோக ராஜ்ஜியம்
மூங்கில்காட்டு தென்றல்
மெல்லிசைமன்னர்
மகுடியாய் ஆனதோ?
கவரி வீச லகரியாய்
மாற்றும் மகிமை அவரிசை
அவர் இசைக்கடலில் செவி வலை
சேகரித்தது முத்துக்களே
நினைத்திரா ஆனந்தம்
நிகழ்த்துவார் காலமும்
விஞ்ஞான வசதி இன்றி
மெய்ஞ்ஞான இசை
எப்படித்தான் இசைத்தாரோ?
நாத விஸ்வரூபமே
விஸ்வநாதனே
Friday, April 30, 2004
# 102 சுட்ட புண் வலி நீங்கிடாது
சுட்ட புண் வலி நீங்கிடாது
பச்சைப் புல்வெளி பலன் தராது
வெற்றி தோல்வியே போதைத் தூண்டில்
வெற்றி தோல்வியே போதைத் தூண்டில்
நிலை மாற்றும் போ புகைக் கூண்டில்
வெற்றி தோல்வியே போதைத் தூண்டில்
மனமே
மனமே அற்ப்பமாகுமே
மனமே அற்ப்பமாகுமே உண்மை கேளேன்
மனமே அற்ப்பமாகுமே உண்மைதானே?
கேட்டதே கிடைத்துமே போதுமா?
கேட்டதே கிடைத்துமே தேடுதா?
கூறடா தேடலின் முடிவை நீ
தோல்வி தாங்காதே கோழை நெஞ்சு
தோல்வி தாங்காதே கோழை நெஞ்சு
தேடுமே தேடுமே நோய்போக்கும் நஞ்சு
குற்றவாளி யார் கூறடா
குற்றவாளி யார் கூறடா
கோடிப் பூவில் சன்னதி சேர்வதெது?
# 101 வார்த்தை பூக்களிட்டு (கசல் இசை வடிவப் பாடல்)
வார்த்தை பூக்களிட்டு யாகம் செய்தும் காணலை
வார்த்தை பூக்களிட்டு யாகம் செய்தும் காணலை
வாதம் மறந்து விட்டு வாசலிலே இதயம் இங்கு
வார்த்தை பூக்களிட்டு யாகம் செய்தும் காணலை
விளக்கம் கிடக்கு விடு...ஆஆ
விளக்கம் கிடக்கு விடு வீணாகும் காலம் அதிலே
விளக்கம் கிடக்கு விடு வீணாகும் காலம் அதிலே
வருத்தத் தீ மிதித்து வேந்தன் மனம் வெந்ததிங்கே
வருத்தத் தீ மிதித்து வேந்தன் மனம் வெந்ததிங்கே
ஏமாந்து பார்த்தேன் திரை அசைவை உன் வருகை என்று
ஏமாந்து பார்த்தேன் திரை அசைவை உன் வருகை என்று
யார் பிழை இதுவென்று இனிமேல் எண்ணிப் பயன் ஏது?
முதல் வீச்சால் எந்த மரமும் வெட்டி வீழ்ந்ததில்லை
முதல் வீச்சால் எந்த மரமும் வெட்டி வீழ்ந்ததில்லை
Tuesday, April 27, 2004
# 100 மானிட ஆற்றலை
மானிட ஆற்றலை மதிப்பிடும்போது
எடைகோல் ஆவது ஊதியம்தானோ?
கற்பனைக் காவியம் படைத்திருந்தாலும்
விற்பனைக்கொவ்வாத கலையும் வீண்தானோ?
கலைப்பாதை பயணம் போராகுமே
கமலத்தின் சூழல் சேராகுமே
எடைபோடலாம், ஈடாகுமா கலைஞானமே?
கலைவானில் சிறகுக்கு விலையில்லையே
விலைபேசும் உள்ளத்தில் கலையில்லையே
கல்லரையில் முடியும் காசின் கதை
சில்லரைக்கொவ்வாது மனிதச் சிதை
காலமும் வாழுமே கலையின் விதை
வேண்டா வரமா?
தீரா தவமா?
ஓயா தேடல்தானா?
தேக்கத்தை தேடாத நீர்வீழ்ச்சி போல்
கலைவாழும் நெஞ்சில் உயிரோட்டமே
பயின்றாலே பலனாகும் பிரவாகமே
# 99 மனவெளியில் தனிப்பிறவிதான்
மனவெளியில் தனிப்பிறவிதான் சுற்றம் சூழல் அங்கில்லை
வீட்டுத் தலைவன், வேலைப் பணியாள் வேடம் ஒன்றும் அங்கில்லை
ஓரம்தங்கிய உதிரிலைகள் சாலையெங்கும் கூட
சீறும் எண்ணச் சாரல் சிறைமீட்ட
அமைதியின் அற்பனம் தெளிவு
மனவெளியில் நான் தனிப்பிறவிதான் சுற்றம் சூழல் அங்கில்லை
இயந்திர வாழ்கையது அடங்கின பிறகே நெஞ்சம்
சென்றடையும் ஏகாந்த அறுசுவைப்பாலின் தஞ்சம்
பூமியிலே மானிடனின் வேலைதான் என்னவோ?
நாடிவந்த பந்தங்களின் தேவைகளைச் செய்யவொ?
காலைப்போது அந்தக் கவலை
இரவு எனது சொந்தமே
சுதந்திர வாழ்க்கையிலும் கடமையின் கைதி மனிதன்
தன் நலத்தைப் பார்ப்பதற்கு
இரவிலும் சில மணி நேரம்
சேவைகள் கோடி செய்தும் சன்மானம் சிறிதுதான்
சாமத்தில் தேடி வரும் சுயவிலாசம் பெரிதுதான்
வானுலாவி திறிந்த எண்ணத்தை
விடியலில் விளங்கிடு
# 98 நகரம்
நகரம் மாலையில் பூத்து
குலுங்கும் மின்சாரத் தோட்டம்
நடமாட்டம் எங்கும் உயிரோட்டம் இதயமே இளைய பருவமே
கடைவீதி வாகனம் விண்மீண்கள், புவியோ விண்வெளி
நகரம் மாலையில் பூத்து
குலுங்கும் மின்சாரத் தோட்டம்
தொழிற்சாலை புகைமூட்டங்கள் நாகரீக முகிலோ? ஏற்றம் தந்த வடுவோ?
உணவு விடுதி சமையல் மணப்பது தென்றல் சேர்த்த சுவையோ? நகரில் ஈக்கள் வண்டோ?
குற்றச்சாட்டு இதுவோ? காட்சி, காண்பவர் பொருத்ததோ?
கிராமம்தான் பிறந்த வீடோ? நகரம்தான் புகுந்த வீடோ?
அட இருக்கும் இடம்தான் இன்பம்
நாம் வசிக்கும் இடத்தை வாழ்த்துவோம்
நகர், கிடைத்த காணிக்கை
உணர்வாய் நீ
சமுதாயம் சேர்ந்ததெலாம் நதிக்கரையில்தானே? முன்னேற்றம் நகரே?
காலச் சுழலில் வேகம் பிறந்தது விஞ்ஞானம்தானே?
விரைவில் வளர்ச்சிதானே?
காணல் பசுமையா கண்டோம்? பழம் பழக்க வசியத்தால் தேங்கினோம்
இயற்கை ஒன்றுதான் வழியோ? செயற்கை என்பதே அழிவோ?
இந்த வாதமே வீண்தானா?
காலச் சக்கரம் திரும்புமா?
நகர், முன்னேற்ற சின்னம்
உயர்வாய் நீ
# 97 வான் வழங்கவே
வான் வழங்கவே
வனமும் வணங்குதே
கொடுப்பதும் எடுப்பதும் இன்பமானதே
இடைவிடாததே
இந்த இயற்கையின் சமரசம் இன்பமானதே
வார்ப்பதும் ஏற்பதும் நிலைமாறும் நாள்போக்கிலே
அனுசரித்திடு
ஓர் நிலை ஓங்கினால் திசைமாறும் சமரசமே
அது சரி சரி
ஓர் நிலை ஓங்கினால் திசைமாறும் சமரசமே
இன்பமானதே இன்பமானதே
இந்த இயற்க்கையின் சமரசம் இன்பமானதே
வேட்கை வளர
வேதனை உனக்கருகில்
வேட்கை களைய
வேள்வி கலைமடியில்
இனி விளங்கினை விட்டு விடுதலை
படர்ந்திடு பறந்திடு இனி
இன்பமானதே இன்பமானதே
இந்த இயற்கையின் சமரசம் இன்பமானதே
# 96 மார்கழி மனம் மாறுமோ?
மார்கழி மனம் மாறுமோ?
கோடையும் குளிர் காயுமோ?
தழுவிடும் மோகமே
ததும்புது சோகமே
இனி தனிமையில் இருவரும் ஒரு முறை இணைந்திடக் கூடுமோ?
தடை விதிமுறை மீறி விடுதலை முடிவுரை ஆகுமோ?
மார்கழி மனம் மாறுமோ?
கோடையும் குளிர் காயுமோ?
உன் மனத்திலே வேளி தாண்டியபின் ஊர் எல்லைகள் ஏது?
சம்மதித்தபின் சரணடைந்தபின் சந்தேகம் அது தீது
மதியாதோர் மாளிகை
அதற்குள்ளே மான் சிறை
ஞானம் தர போதி மரம்
ஞாயம் தர யாரடி?
மார்கழி மனம் மாறுமோ?
கோடையும் குளிர் காயுமோ?
இது ஒரு படிப்பினை
எனக்கில்லை குடுப்பினை
அட விதியும்கூட பேரம்போகம் பகடைக் கை
இதை அறியாது நான் அவளை நினைத்தால் அவல நிலை
வருங்காலம் வாழ்த்தலாம்
சரிதையை மாற்றலாம்
ஆறாது இந்த வடு
என்றாலும் போதும் விடு
இது ஒரு படிப்பினை
எனக்கில்லை குடுப்பினை
(மார்கழி...
# 95 வரையறைக்கினங்கா உறவிதுவே
வரையறைக்கினங்கா உறவிதுவே
வரையறைக்கினங்கா உறவிதுவே
சலனமும் சபலமும் சிறுபிள்ளைத்தனமே
வரையறைக்கினங்கா உறவிதுவே
மாதவனின் மடலாயமென் மனதே
மாதவனின் மனதானதென் மடலே
கண்ணன் மீரா ஓர் அறிய அடைக்கலம்
அடைக்கலம் அறிய ஓர் மீரா கண்ணன்
(வரையறைக்கினங்கா...
சலனமும் சபலமும் சிறுபிள்ளைதனமே
வரையறைக்கினங்கா உறவிதுவே
உதடும் உதிரும் உன் பேர் சொல்லாது
உதிரும் உயிரும் உன் சொல் பெறாது
உதிரம் உறையும் உனை நினைக்காது
நீ எந்தன் உடைமை என நினைக்காது
நீர் செல்லும் ஓடையில் கதிரினை சுமந்தே
நீர் செல்லும் ஓடையில் முடிவுரை மறந்தே
கலப்பிடம் கருதா நீர் நிலை எனதே
கலப்பிடம் கருதா யாவையும் புனிதே
(வரையறைக்கினங்கா...
மீரா கேட்பதில் எதிரொளிப்பவனே
மீரா பார்ப்பதில் பிரதிபளிப்பவனே
மீறா மரபின் முறன் மூலமவனே
மீறாதிருந்திட முயர்ச்சிகள் இலையே
ஆதிக்கம் ஆனது அவன் செயலே
ஆதிக்கும் மீதிக்கும் அவன் பொருளே
ஆதரம் ஆதலை ஆதிபனே
(வரையறைக்கினங்கா...
# 94 கால்கள் ஓயா கடல் காற்றே
கால்கள் ஓயா கடல் காற்றே
காளை நெஞ்சின் நீர் ஊற்றே
தூங்கும்போது கதிரவனும்
அலைகளின் போர்வையில் அடங்கிவிடும்
காலம் இயங்கும் உனை மறந்து
கானமும் வருமா செவி அறிந்து
நீதான் இயங்கனும் வழிவகுத்து
கார் வானிலும் நிலவிருக்கு
யதார்த்தமாக இருந்து விடு
ஏழுவகைத் துன்பம் இனி வென்று
ஏற்ற, தாழ்வு
ஏழ்மை, செல்வம்
எடையிட்டுப் பார்த்தால் அது துன்பம்
சோகமழை பெய்கையிலே
சிரிப்புக் குடையை விறித்துவிடு
நானே நீராய் வருவேன்
ஓடம் உனைக் கரை சேற்க
# 93 தொலைவிலே ஒலிக்குதே
தொலைவிலே ஒலிக்குதே
தென்னை தலை அசைக்குதே
இது தென்றலின் ரகசியம்
இதில் சோலையெல்லாம் வசியம்
அந்த ஓடைக் குயிலும்
ஒரு பாடல் புனையும்
இந்தக் கொன்றை மரம்
குலுங்கி பூக்கள் வரும்
இயற்கையே இசை மயம்
நாம் ஓய்ந்ததும்
பகல் நேரம் நமை அனுசரித்து
நடமாட்ட இம்சைகள் பொருத்து
தனைக் காக்கிறாள் பூமித் தாயே
நெடுஞ்சாலை வாகனக் கிளர்ச்சி
தொழிற்சாலை புகையிலும் மலர்ச்சி
தினம் காட்டுவாள் பூமித் தாயே
நூதனம் போற்றிடும் மானிட வாழ்வால்
கீழ்த்தரம் ஆகுதே வானவர் சீதனம்
மெய்ஞானம் வாழுமோ?
விஞ்ஞானம் வாழுமோ?
கேள்வி கேட்டும் வியக்கிறேன்
இயற்கை புதிதாய் பிறக்குமா?
புணலின், ஓடையின் ஓட்டத்தை
மனிதச் சிறுமை பூட்டுமா?
சேய் மாறிப் பொனாலும் தாய் மாறா நீதி
ஏற்றம் தந்த தியாகி
சீற்றம் கொள்ளா சாதி
நீயே இங்கு நாதி
வாடா துந்தன் ஜோதி
காடாக வான் நோக்கி நீ வாழ்ந்து பார்த்தும்
பிரசுரத்தில்
உன் கதை முற்றும்
பாறைக்குள் தீயும் உறங்கும்
புதைமணலில் பதுங்கும் நிலமும்
ஏரிக்குள் நாரை அழகும்
இரையாகும் மீணின் துயரம்
ஒளி உண்டானதும் கூடவே
நிழல் உண்டானது உண்மையே
பொன்னானது என்று போற்றவோ?
பொல்லாதது என்று தூற்றவோ?
எந்நாளும் தேடித் தேடியே
என் நாட்கள் போக்க வேட்கையே
# 92 விழி வாசலில்
விழி வாசலில்
மனக்கோலங்கள்
தெரிகின்றன
மொழி தேவையா?
செவி சாய்ப்பதில்
கரை சேர்வது
மொழி சல்லடை
செய்த மீதமே
உரையாடலில்
பிறர் வாடட்டும்
உறவாடுவோம்
விழிக் கூடலில்
அர்த்த ஏணியில்
மொழி கீற்படி
ஏறிப்பார்த்திடு
விழி மேற்படி
தன்னை வார்ப்பதும்
ஆழம் பார்ப்பதும்
என்னைச் சேர்வதும்
ஆசைக் கண்களே
Monday, April 26, 2004
# 91 கலவாத இரு பால்
பெண்:
உரிமையில்லாத உறவுக்காக
உணர்வு ஏனோ துடிக்கிறது
உடைமை என்று ஆனபின்னே
கடமை என்று நினைக்கிறது
ஆண்:
கடிதம் கண்டேன் காதல் கொண்டேன்
சொல்வாய் என நான் எண்ணவில்லை
அகத்தின் நிகழ்வை நகலெடுத்து
எனை சீர்குளைத்ததைச் சித்தரித்தேன்
பெண்:
வாலிபத்தில் காதல், கவிதை
வயோதிகருக்கு வியாதியைப் போல்
காலம் கடந்தால் மறந்துவிடும்
குடும்பம், கடமையில் மறைந்துவிடும்
ஆண்:
செயற்கை, சபலம், பருவம்
எனக் காதலைக் குறைத்துப் பேசுவதேன்?
தகுதி என்ற தராசுகோலை
காதல் தானே உடைக்கிறது?
பெண்:
தனக்கு உள்ள பேராசைகளை
லட்சியமாக்கி மேம்படுத்தி
விருப்பமில்லா பெண்களை
வசியம் செய்யும் வேலையிது
ஆண்:
ஆசாபாசம் பிரதியுபகாரம்
காதலில் இருந்தால் கவிதை ஏது?
எதிர்ப்பு இன்றி எழுச்சி ஏது?
கவலை இன்றி கற்பனை ஏது?
பெண்:
ஏக்கம் இன்றி தாக்கம் ஏது?
துக்கம் இன்றி தர்க்கம் ஏது?
இயல்பின் சரித்திரம் அமைதியானது
தன்னிறக்கம் தெரியாதது
ஆண்:
துணையில்லாத நெஞ்சுக்கெல்லாம்
கவிதை வரியே ஊன்றுகோல்
தோற்றுத் துவண்டு தளர்ந்தவர்
நிமிர்வதற்கே இந்த எழுதுகோல்
# 90 நீ தந்த வாக்கு
நீ தந்த வாக்கு நிலைத் தேரோ?
இங்கு தீயாய்ப் படர்ந்து இருளெனச் சூழுது என்னை இயலாமை
ஏறிய ஏணியும் தினமும் கொண்டு சேர்க்குது எனைக் கீழே
என்னாமோ? ஏதாமோ? யாராலே கூரு
காசு வசதி ஜெய்க்கும் காதலையே
யாசித்துச் சென்றாயே, சென்றாயே ஏளனப் பார்வை சிந்தி
நின்ற நிழல் கூட நெருப்பாச்சே
ஞானம் வரும் சேர்த்தே துயருடனே
என்னாமோ? ஏதாமோ? யாராலே கூறு
நீ தந்த வாக்கு நிலைத் தேரோ? இன்று போனாய் தோர்த்து
வாழ்வே பாடம் தானா? தேர்வு காண தோற்றேனா?
பாசமென்ன முள்ளா? நீக்க நீக்க வலியா?
வெட்ட வெட்ட வளரும் திட்டமிட்ட சதியா?
தோல்வி தரும் ஞானம்
வெற்றி தரலாது
ஒன்று சேர்ந்த அன்பும்
உண்மை ஆகிடாது
# 89 கடைப்பார்வையால்
கடைப்பார்வையால் எடைபோடுவாய் கணக்கீடெலாம் காதலாகுமா?
விளங்காமலே அரங்கேறிடும் வினை ஏனம்மா? விபரீதமே
தவம் காப்பதால் வராது
தன் போக்கிலும் விடாது
தனை மறப்பதே காதல்
நினைவிழப்பதே காதல்
கடைப்பார்வையால் எடைபோடுவாய் கணக்கீடெலாம் காதலாகுமா?
உடல் இயங்கும் வாழ்வின் தேவையறிந்தே உணர்ச்சிகள் மறைத்தே
மனம் மயங்கும் நிஜம்தனை மறந்தே உறவினில் நிலைத்தே
கனாவிலும் காந்தம் போல் ஈர்க்குமே
வினாவினால் அர்த்தம்தான் ஏய்க்குமே
இன்பம் மட்டும் கூட்டுமே
கடைப்பார்வையால் எடைபோடுவாய் கணக்கீடெலாம் காதலாகுமா?
இதோ இதோ இவனுக்கு இனங்கு மனம் முடிவெடுத்தால்
இதையம்தான் இனங்கிடுமா?
கடைப்பார்வையால் எடைபோடுவாய் கணக்கீடெலாம் காதலாகுமா?
விளங்காமலே அரங்கேறிடும் வினை ஏனம்மா? விபரீதமே
தவம்காப்பதால் வராது
தன்போக்கிலும் விடாது
தனைமறப்பதே காதல்
நினைவிழப்பதே காதல்
Sunday, April 25, 2004
# 88 ஆசை என்றும் வெட்கம் அறிந்ததில்லை
ஆசை என்றும் வெட்கம் அறிந்ததில்லை
ஞானம், தேடும் மனிதனை அடைந்ததில்லை
விதி ஒரு நிலை
வரையரை இலை
மனம் ஒரு சுழல்
சுவை அதில் விழலே
விரதம் என்பது நாடகம் அதுவும் வேறொரு நண்மையின் வேண்டுதலே
(ஆசை...
ஆசா பாசம் தேவையா யாவுமே மாயையா?
வான்மதி பொய்யோ? மைய்யிருள் பொய்யோ? பார்வையின் மூலம் பொய்மையோ?
ஊடல், கூடல், தேடல் மெய்மையோ?
காதல், மோதல், சாதல் மெய்மையோ?
யார் விளக்குவது?
நேற்று, இன்று, நாளை மெய்மையோ?
நினைவோ
இது மனச் சறிவோ?
நிகழ்வோ
இது தேவ திகழ்வோ?
வாரணமாயிரம் கடந்திருந்தாலும் கேள்விகள் கேட்டு முடிவதில்லை
உறவு எலாம் பகற்கனவோ?
உரிமை காப்பதும் தேவையோ?
உணர்வதெல்லாம் பிரதிபளிப்போ?
உணர்ச்சியின் அடிப்படை உடற்பொருளோ?
வேதாந்தம் சித்தாந்தம் வார்த்தைப் பிழையோ?
ஆதாரம் இல்லாத வார்த்தை பிழையோ?
பாத்திரம் போல் விதியோ?
நீர்துளி நீ சிறையோ?
சாத்திரங்கள் சதியோ?
சாத்தியதேவர் கதையோ?
# 87 கிராமிய காதலன்
சித்தாடைக்காரி மத்தாப்புப் போல சிரிச்சாளே
தூரி பாடியவ தீராத வேலையக் களைச்சாளே
கற்பனை சூடு உச்சந்தலையேரும்
கத்திரிக்கும் வெய்யில், ஒட்டிட நீ வேணும்
காத்திருக்க வெச்சா முத்த அபராதம்
மொத்த சுகம் தந்தா மச்ச அவதாரம்
காதும் காதும் வெச்சதப்போல
காதல் விவகாரம்
கண்ணும் கண்ணும் அடிக்கிற பந்தாய்
மனசு சதிராடும்
(சித்தாடைக்காரி...
பனையிலைக்கு ஊட பால் நெலவு அமைப்பு
கூரைச்சேலை இடையில் குளிரும் உன் இடுப்பு
வெக்கை என்னை வாட்டும், ஆனாலும் சிலிர்ப்பு
வெத்தலையப் போட்ட உன் மாதுளைச் சிரிப்பு
புள்ளி மானைக் கோலம் போட
கைவிரல் துடிக்கும்
கள்ளி உன்னைக் கண்டாப் போதும்
காலி வயிர் செரிக்கும்
(சித்தாடைக்காரி...
# 86 கனவினில் வந்தது காட்சி
கனவினில் வந்தது காட்சி
அது களைந்ததுக்கில்லை சாட்சி
உறவுக்குத் தேவை ஆழம்
உணர்ச்சிக்கு ஏது மூலம்?
வந்து விளையாடு
நீ சுந்தரியாம்
நான் மன்மதனாம்
மனசை உன்னிடம் தந்தவனாம்
காதல் மன்மதனாம்
(கனவினில்...
ஒரு சந்தர்ப்பமாய் நீ சிரிப்பதை நான்
தரிசித்த முதல் நொடி
அதற்கங்கத்தின் எடையை தங்கத்தில் ஈடாய்
கொடுப்பதும் குறைச்சலடி
நம் காதலின் களியாட்டங்கள்
கொண்டாடித் தீராதடி
அத்தனை நாட்டின் அந்நிய செலாவணி
இருந்தும் பத்தாதடி
(கனவினில்...
அன்று மன்னர்கள் எல்லாம் மாளிகை நிறைய
மங்கையர் வைத்திருந்தார்
என் மாளிகை எங்கும் உன் முகம்தான்
நான் மன்னவன் என்றுரைத்தால்
பட்டம் பதவி மட்டும் பெற்றோர் மனதில்
காதல் தகுதி என்றால்
சட்டம் மீறி உன்னை சிறையிடுவேன்
நீ சம்மதம் என்றுரைத்தால்
(கனவினில்...
