உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, August 18, 2004
# 163 தேய்பிறை புன்னகை
நிலவே உந்தன் தேய்பிறைக்கும் முகம் புன்னகைக்கும் திடம் யார் தந்ததோ?
நிலவே உந்தன் தேய்பிறைக்கும் முகம் புன்னகைக்கும் திடம் யார் தந்ததோ?
யாரும் தேயும் நிலை வாரும்
யாரை விட்டதிங்கு காலம்
ஒரு பாதையாய் போகையில், வழிமாற்றமே வாழ்க்கையா?
நீ என் காதில் சொல்வாய்...
(நிலவே...
தொடரும் பயணம் என்கிற நெஞ்சில், சரிந்ததும் அனுபவத் தழும்பா?
இதுபோல் கனலில் நடந்தால், பரிசு காண்பது வேறொரு வாழ்வா?
ஞாயம் மறுத்திடும் வாழ்க்கையை
நாமும் மறுப்பதே ஞானமா?
(நிலவே...
