உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 05, 2004
உச்சி முதல் பாதம் வரை
கார் மேகம் கூட்டம் சேர்ப்பது
உன் கூந்தலிடம் எண்ணை கொண்டாடும்
அன்னியோன்யத்தை அழித்திடத்தானே?
அனையாத அடுப்பாய் அடிவானம் பொருமும்
உன் முக ஜோதிக்கு முன்
அது அன்றாடம் காய்ச்சிதானே?
கண்ணுக்கு மை அழகாம்
பிறரை கொந்தளிக்கவைக்கும்
குளிர் தெப்பங்களைச் சுற்றி
எச்சரிக்கை கோடு அழகா?
கண்களையாவது அனுமதியேன்
கோடு தாண்ட
இருபது ரோஜா இதழ்களை
அடுக்கி மேலும் கீழும் வைத்து
புன் முருவல் இம்சையை இடையில் வைத்து
அதென்ன கருவியோ உன் உதடுகள்
என் உடலின் ஈரம் அனைத்தும்
சுருக்கி என் நாவில்
ஆசை ஊற்றெடுக்க வைக்கிறது
கழுத்தின் அம்சமென்ன
கேட்க வேண்டுமா?
ஒரு சொர்கத்தை விட்டு
மறு சொர்க்கம் கூட்டிச் செல்லும்
சறுக்குமரமாயிற்றே அது
நிறை குடம் தலும்பாதாம்
எங்கே உன் ஒரு கை அனைப்பில்
இடுப்பு ஏறச்சொல்
பார்ப்போம் அதன் குனத்தை
சிந்திவிடும் அதன் சங்கதி
கொலுசு மணிகள் கைகோர்த்துச்
சினுங்குவது
உன் கனுக்கால் மேல் உறசி
உறவாடத்தானே?
உதிர் இலைகளின் சலசலப்பு
உன் பாத மிதி பட்டு
மரணிக்கத் தானே?
பாதத்துடன் முடிந்தது
உன் உருவம்
அதன் சுவடுகளில்
படர்ந்திடும் என் பருவம்
Comments:
Post a Comment
