உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, July 23, 2004
# 160 நீலாம்பரி...
நீலாம்பரி...
நிலத்தினில் நீர் விழும் சுவைதானே நீ?
நீலாம்பரி...நீலாம்பரி...நீலாம்பரி
தூக்கத்தின் ரகசிய தூதுவள் நீ
நீலாம்பரி...நீலாம்பரி
பறவைகள் நீந்திடும் புன்னிய கங்கையோ நீ?
தாய்மையின் பாடலை ஏந்திடும் தோழியோ நீ?
தென்றலும் ஓய்வெடுக்க உன்னையே தேடுமோ?
வெண்ணிலா வாயெடுத்தால் உன்மொழி பேசுமோ?
வாசனைச் சோலையெல்லாம் உன் குணம் போற்றவோ?
வார்த்தைகள் கோர்த்துவிட்டு உன் மெட்டில் ஏற்றவோ?
மாதவன் குழல் மாதிரி
ஓதுவாய் நெஞ்சில் நிம்மதி
சிந்தை வான்வெளி
சந்தம் வான்மதி
(நீலாம்பரி...
வேதனை அலைமோதையில் கரிசனத் தோனியோ நீ?
பூபால மங்கையின் ராப்பாடித் தங்கையோ நீ?
வாத்தியம் உனை வடிக்க வைத்தியம் ஆகிறாய்
ராத்திரிப் பாய் விரிப்பு மேடையை ஆள்கிறாய்
வேகமே வாழ்க்கை இன்று ஓய்வுக்கு ஓயவில்லை
சோர்விலே சாய்ந்த போதும் பாடிடக் காயமில்லை
மோகமே மெளனப் பொய்கையாய்
சூழுமே நெஞ்சில் ராகமாய்
சிந்தை வான்வெளி
சந்தம் வான்மதி
(நீலாம்பரி...
