உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, August 10, 2004
# 162 கடந்த கால காட்சிகள்
கடந்த கால காட்சிகள்
நினைவரங்கிலே
பிறந்த ஊரின் சூழலில்
உணர்ச்சி பொங்குமே
திரும்பி பார்க்கவோ?
கலைத்து நீக்கவோ?
நினைத்தால்...இங்கு உரைந்து கிடக்கும் பருவ ராகம் ஓலமாகுமோ?
(கடந்த...
நாரை தேடும் மீன்கள்போல் ஏக்கங்கள்
ஆக்கத் தேவை பூர்த்தியால் அழிவுகள்
இந்த நிலை தேடியா பாதை மறுத்தேன்?
பந்தக் கடன் தீர்க்கப்போய் நேசம் முறித்தேன்?
வெகு நாள் மனமுகில் மோடம் போட்டுவிட்டு
நனையும் இன்று உண்மை வெட்கம்கெட்டு
முதலாம் மோகம் பதியும்
அது இதயம் நீங்கா தடயம்
அந்த பிஞ்சுக் காதலின் நெஞ்சத் தூய்மை ஏதினி?
கொண்ட சொந்த பந்தமே எதிர்பார்ப்பில்தான் இனி
திருக்கோவில் தெருவில், வீதி முனையில்,
ஆற்றங்கரையில், தோப்புக்கருகில்,
படர்ந்திருக்கும் பனியென
அவளை நினைவூட்டும் சின்னங்கள்
Monday, August 09, 2004
# 161 மரிக்கொழுந்தே...
மரிக்கொழுந்தே
நுகர நுகர வளரும் வசியம்
உரச உரச மனசு மசியும்
இதயமே இரவலா?
மரிக்கொழுந்தே
மரிக்கொழுந்தே
தெக்கு திசைதான் எப்போதும் தென்றல் வீசும் திசையாகும்
திக்கு தெரியா மயக்கத்திலே மணம் தேடி அது வீசும்
இது சரியா, முறையா?
விதி சரியா விதி முறையா?
வழி பிடிபடாமலே நழுவிப் போகிற மாயை இந்த முகையா?
தேடத் தேட தெளிவாகும்
நாடுவதா பொருளாகும்?
வலையை வீச குறிமாறும்
மீனைப் போல மெய்ஞானம்
இந்த தென்றல் தேடப் பொய்யாகும்
மரிக்கொழுந்தே...
வளைஞ்சுதான் குடுக்கிற வானவில் நான்
வளைஞ்சுதான் குடுக்கிற வானவில் நான்
அகலமா விரியிற அலைகடல் நீ
கைப்பிடி ஆகப் பாத்தா
கடலுக்குக் கோபம் ஆத்தா
உன்னைத்தூக்க வாரேன் புள்ளை
என்னை விட்டா ஆள்தான் இல்லை
அலைகளா பாயிற நாக்குதான் மடியாது
மூழ்காம மெதக்குறேன் நான் எப்படி ஆளு?
பிடிபடப் போறியா? அடிபடப் போறேனா?
பொறுத்துதான் பாப்பமே கனியுமா காலமே
மரிக்கொழுந்தே...
வேட்டைய விரும்பிற மானுங்க ஏது?
வேடனா என்னை நீ பாப்பதும் தீது?
புரியாததின் மேல் கோபமா?
புலனாய்வு செஞ்சா பாவமா?
கூடலை விரும்பிடும் கூக்குரல் கேக்குமா?
ஆசையின் அழைப்பிதழ் அப்புரம் ஏற்குமா?
விடியிற வேளை பாத்து கருக்கிற மேகமா?
மரிக்கொழுந்தே...
