உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, January 10, 2006
# 185 ஒரு மழைத்துளியின் சுயசரிதம்
இன்றைய அந்தி மழையின் துளி நான்
பூமி காதலிக்கு மேகம்
பொழிந்த காணிக்கையில்
நானும் அடக்கம்
இலைகள், கிளைகள், முட்கள் தழுவியே
எனது பயணம் இதுவரையில்
என் முடிவு மலரிதழ் என்றால்
முழு மனதாய் மணம்
கொடுத்து மகிழ்வேன்
காற்றிலே ஆன்மா கறையும் என்றாலும்
அதை வாடை என்று பொருள்
மாற்றி பூரிப்பேன்
பூமித் தாயின் மடியிலும்
எந்தன் இறுதியின் ஈரம்
பயன் தரும்
ஆனால் மனித உடலில் விழுந்தால்
ஒரு பயனுமின்றி
வழியில் சேகரித்த சுவை முகையும்
இழந்து மறிப்பேன்
