உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 14, 2004
# 50 நிலத்தில் நிரந்தரத்தை
நிலத்தில் நிரந்தரத்தை
தேடும் நப்பாசை எனக்கு
உறவில் சுதந்திரத்தை
தேடும் உரிமை உள்ளதுனக்கு
இதுதானா? சதுரங்கம் இதுதானா?
உன் முகத்தில் மறைந்திட்ட
புன்னகையின் கதை என்ன
என்றுன்னை கேட்க வந்தேன்
என் இளமை இயக்கத்தில்
உன் அழகு கிறக்கத்தில்
இருப்பதாய் என்னுகின்றாய்
உன்னைக் கண்டு துவண்டு நின்றேன்
அந்த உண்மை மறந்து சென்றாய்
இளையவனின் நெஞ்சில் சிக்கல்
ஏற்படுத்தி என்ன நக்கல்?
நினைவை மென்று
முழுங்க நினைத்தால்
மீண்டும் நிலை நிருத்துதடி விக்கல்
நிலத்தில்...
விக்காத பொருளை
விலைபேச வந்தேன்
வீணான வியாபாரமா?
முதல் கட்ட நிலையில்
தரையினில் விரிசல்
ஆரம்பம் பூகம்பமா?
நான் என்ன மேய்ச்சல் நிலமா?
மனமாற்றல் உந்தன் குனமா?
சீண்டி விட்டு தள்ளி நின்றாள்
தூண்டி விட்டு தலைமறைந்தாள்
இருட்டுக் கடலில் மிதந்து தவிக்கும்
இதயம் தேடுது உன் கலங்கரை விளக்கம்
நிலத்தில்...
# 49 தாழம்பூவா நீ
தாழம்பூவா நீ தள்ளி வைத்தாலும்
வாசம் என்னருகே வீசுதடி
என்னத்தில் ஊறும் இன்பத்தின் சாரம்
துன்பத்தில்தானோ இன்பத்தின் ஈரம்
கொண்டாடிடும் பேதை மனம் ஏன்? ஏன்?
(தாழம்பூவா...
சொல் இழந்த பாடலாய் சந்தம் மட்டும் வாழ்வதா?
காதல் வரி படித்த கண் கண்ணீர் வரி வடிப்பதா?
கொள்கைகளின் மோதலில் கொண்டவனை பிறிப்பதா?
கொன்றெரித்த பினங்களில் கொள்கை வெற்றி கிடைத்ததா?
மூன்று முடி போட்டவன்
நூலிலாடும் பொம்மை
ரெண்டுபட்ட நாட்டில்
நிரபராதி இல்லை
கொள்கைக் கணல் காதல் திரி ஏற்றாதடி
(தாழம்பூவா...
சொந்தமென்று வந்தபின்
தேச பக்தி வாழுமா?
ஏர்முனைக்கும் வாள்முனைக்கும்
காதல் இனையாகுமா?
இன வெறிக் கலவரத்தில்
நில வெறி சேர்ந்ததால்
நாடு ரெண்டு மோதையில்,
நெஞ்சம் ரெண்டு சேர்வதா?
முகவரி இல்லாது போனதடி காதல்
முற்றுப்புள்ளி வரும்வரை உன் நெற்றிப்புள்ளி வாழ்தல்
சந்தேகம்தான்
என் வாழ்வை நீ வாழ்வாய்!
(தாழம்பூவா...
# 48 மேகம் திரை போடும் நிலவே
அவன்:
மேகம் திரை போடும் நிலவே நிலவே
பொங்கும் அலைகளாக என் மனம்
உன்னைத் தேடிப் பாயுதே
மேகம் திரை போடும் நிலவே நிலவே
மோகப்பார்வை கொண்டு தாக்கிட
இந்த நிலவும் கொதிக்குமே
அவள்:
மேகம் திரை போடும் நிலவே நிலவே
மோகப்பார்வை கொண்டு தாக்கிட
இந்த நிலவும் கொதிக்குமே
அவன்:
பூவைத் தீண்டும் வானொளி
இருளை போக்கவா?
பாலாடை நீக்கி பால் நிலாவை
பருகிப் பார்க்கவா?
அவள்:
தள்ளி நின்று பார்ப்பது
தூண்டும் ஆசையில்
வாராமலே நான் வாழ்கிறேன்
உன் நினைவுக் கூடத்தில்
அவன்:
தயக்கம் முகிலோ
அது தூறலாகும் வேளை பார்த்து தோகை ஆடுவேன்
அவள்:
மேகம் திரை...
அவள்:
சூண்யமாகிப் போய்விடும்
சிற்றின்பம் காதலா?
சூடாறிட நீராடிட
நான் தேகத் தேவையா?
அவன்: ஆடவர்கள் யாவரும்
உன் எண்ணம் போலவா?
உன்னை பாதுகாக்க வந்த கையை
பழிக்கலாகுமா?
அவள்:
முறையோ தவறோ
இந்தப் பூவின் கண்ணில் கைகளெல்லாம் பறிக்கவந்ததே
# 47 நட்பென்றால் சொந்தம்தான்
நட்பென்றால் சொந்தம்தான் தேடிச் சேர்ந்த சொந்தம்தான்
ரத்தத்தை சிந்தும் சொந்தம்தான்
கடமையிலும் குடும்பத்திலும்
காலம் உன்னை கட்டிவிடும்
கட்டற்றது நட்பு ஒன்றுதான்
(நட்பென்றால்...
பழையவரும் புதியவரும்
இணைகையிலே சலசலக்கும்
கல்லூரி வரலாற்றில் இது முகவுரையாகும்
வெளியுலகின் பிரதிபளிப்பே
இவ்வுலகின் அனுசரிப்பே
எதிர்நீச்சல் போட்டவருக்கே
ஏற்றம் கிடைக்கும்
அன்பில் தொடங்கி காதல் வரைக்கும்
சென்ற படகு கவிழ்ந்துவிட்டால்
தோழரின் தோள்கள்தானே தாங்கி நிறுத்தும்
பள்ளியறையில் ரெண்டு வகையே
ரெண்டும் கிடைக்கும் ஒரு இடமே
காதலில் தோல்வி உண்டு நட்பில் இல்லையே
(நட்பென்றால்...
வெள்ளை மனதாய் வந்த இளமை
வேகம் கூட்டி வந்த இளமை
வாழ்கையதின் அனுபவப் படியை
ஏறும் வேளை
தந்தை வழியே சென்ற இளமை
தன் வழியே செல்லும் நிலைமை
தனக்கென்று லட்சியம் ஒன்றை
தேடிப்பார்க்கும்
வேளை வாங்க கல்வி பயில
வந்த மனதில் சோகம் நிலவும்
வந்த வேலை முடிந்தும் எரியும்
நட்பின் ஜோதி
நாலு திசையும் கூட்டம் சிதற
நினைவிருக்கு நட்பு வளர
நட்பிற்க்குத் தேவையில்லை இறங்கல் கூட்டம்
(நட்பென்றால்...
Monday, April 12, 2004
# 46 பாசத்தின் இயற்பெயர்தானா அம்மா
பாசத்தின் இயற்பெயர்தானா அம்மா
பலனின்றி பணி செய்வதின் பொருல்தான் அம்மா
சாகசங்கள் கோடி செய்தும்
தாயின் அன்பிற்கு ஈடாக
ஏது செய்தாய்?
(பாசத்தின்...
பிள்ளைக் கடவுளை வழிபட நேர்ந்தாலும்
அவன் அன்னை அன்பிற்கு அடிமை அன்றோ
மதம் என்ன குலம் என்ன நிறம் என்ன மனிதர்கள்
மறக்காமல் போற்றிட அவள்தான் என்றும்
கடிந்தாலும் சிரித்தாலும் கண்ணீரை வடித்தாலும்
அவள் காட்டும் வழி என்றும் சீரானதே
மனிதாபிமானத்தின் உள்ளர்த்தம் அவள்தானே
அடைகாத்து அவள் ஈன்ற பொருள் நீயடா
உடலாக உயிராக
பிரசவித்த தாய்க்கென்றும் பூஜை
(பாசத்தின்...
எங்கெங்கும் இருக்கின்ற தெய்வத்தின் வடிவத்தை
அன்னையின் உருவத்தில் நீ காண்கிறாய்
சுயம் என்ற சொல் என்றும் அவள் நாவில் உதிக்காது
சேய் என்ற சூழலில் அவள் எண்ணமே
உனக்கென்ற எதிர்பார்ப்பு உனக்கில்லை என்றாலும்
அவள் கனவை நிறைவேற்ற செயலாற்றுவாய்
அவள் தொடங்கும் நல்லெண்ணம் உனைத் தொடரும் பெருந்தன்மை
உன் சிசுவும் உனக்கென்று செயலாற்றுவார்
இயல்பான சுக நீதி
தொடங்கிய திரு உள்ளம் தாயே
# 45 நாத நயம்போல் உந்தன் விழி
ஆண்:
நாத நயம்போல் உந்தன் விழி
இமை அசைத்தாலே இதயம் பலி
(நாத...
பெண்:
வாழ்கைப் பாதை வகுத்தது யாரோ
நம் வழி இங்கே இணைகிறது
ஆண்:
காற்றைச் சேர்ந்த தாழை மலர்போல்
காதலர் மூச்சும் ஒன்றிடுதே
பெண்:
மலர்ந்திடும் மோகம்…
மலர்ந்திடும் மோகம் புது உணர்ச்சி
விரல்களும் தேட ஒரு கிளர்ச்சி
ஆண்:
வலம்புரிச் சங்கு முழங்குது இங்கு
வசந்தமும் விரைவில் வரும் அருகே
உறவே தனிமை மறந்துவிடு
(நாத...
ஆண்:
ஆயிரம் அர்த்தம் பேசிடும் கண்ணில்
என் நிழலாட நான் பணிந்தேன்
பெண்:
ஆத்திர நாயகன் வேடம் கலைந்து
ஆசையின் ஆழ்கடல் மூழ்கிட வா
ஆண்:
வழிப்பறி செய்தாய்…
வழிப்பறி செய்தாய் மனமுவந்தேன்
களிப்பினில் கூட கண் துடைத்தேன்
பெண்:
புதை மனல் வாழ்வில் உயிர்கரம் நீயே
காத்திடும் உன்னை நான் காக்க
இல்லறம் நிரந்தரம் ஆகட்டுமே
(நாத...
# 44 கண்ணாலே பேசும் காதல் பொழுதா?
பெண்:
கண்ணாலே பேசும் காதல் பொழுதா?
கன்னத்தில் விருதா?
இதழ்கள் தருதா?
எண்ணங்கள் இனிதா?
எந்நாளும் உனதா?
ஆண்:
காதலை ஈன்ற காமனின் மகளோ?
காதலை ஈர்க்கும் காந்தம் உன் விழியோ?
மறைந்தது கதிரோ கதிரவன் புகழோ?
கனவிது பகலோ?
(கண்ணாலே பேசும்…
பெண்:
ஆதவன் இழந்த புகழை நான் பெறவோ?
காலம் கடந்தால் என் நிலை அதுவோ?
புகழ்ந்திடும் மனிதா
உணர்வது அறிதா?
காலத்தின் விழுதா?
(கண்ணாலே பேசும்…
ஆண்:
புன்னகை இனத்தில் சஞ்சலம் புதிதா?
புகழ்வதாலே சந்தேகம் வருதா?
பெண்:
அனைத்திடும் கைகள்
அணையென ஆகும்
அனைத்திரு நாளும்
ஆண்:
கண்ணாலே பேசும் காதல் பொழுதா?
பெண்:
கன்னத்தில் விருதா?
ஆண்:
இதழ்கள் தருதா?
இணைந்து:
எண்ணங்கள் இனிதா?
எந்நாளும் உனதா?
# 43 அன்பின் சுடர் விழி
பெண்:
அன்பின் சுடர் விழி சுடர் விழிதான்
காதல் தோழா
ஆண்:
ஆசை தவிக்குது தவிக்குது பார்
பார் தோழி
தீயில் கொதிக்கும் நீர் உடலா?
நீரைக் கொதிக்கும் தீ மனதா?
தீயில் கொதிக்கும் நீர் உடலா?
நீரைக் கொதிக்கும் தீ மனதா?
மூலத்தைப் பார்க்காமல் மோகத் தீ ஏற்று
பெண்:
தீயில் கொதிக்கும் நீர் உடலா
நீரைக் கொதிக்கும் தீ மனதா
மூலத்தை பார்க்காமல் மோகத் தீ ஏற்று
(அன்பின் சுடர்விழி…
பெண்:
தீயோ பிறந்தது கல் உரச
காதல் பிறந்தது கண் உரச
தீ கொழுந்தே வா வா
உறவுத் திரி ஏங்க
ஆண்:
தீ கொண்டு சமைத்தான்
முதல் உணவு
காதலில் சமைப்போம்
நம் உறவு
தகிக்கிறதே வா வா தகிக்கிறதே வா வா
பெண்:
ஆயுதம் தீட்டிட தீ உதவும்
ஆசை தீட்டிடவா
தீண்டிடவா வா வா
தீக்குளிப்போம் வா வா
ராமன் கேட்க தீக்குளித்தாள்
சீதை என்ற ஓர் அரசி
அது பழங்கதை பழங்கதை பழங்கதை
(அன்பின் சுடர்விழி…
ஆண்:
ஆண்கள் இயற்றிய தீய சதி
பெண்கள் உடன்கட்டை ஏறும் சத்தி
நம் முன்னோர்கள் தீயவறா?
நீயும் நானும் விதிவிலக்கா?
பெண்:
கல்லில் உறங்கிடும்
தீப்பொறிபோல்
மனிதனின் மனதில்
தீமை உண்டு
அதை எரிப்போம் வா வா வேள்வித் தீ வா வா
ஆண்:
காதல் வகுப்பது புரட்சிக் கணல்
கடந்த காலம் கரிசல் மணல்
கடைபிடிப்போம் வா வா
மறுமலர்ச்சி வா வா
இருட்டறை உலகின் வெளிச்ச வழி
வகுப்பறை வகுத்த ஞாண ஒளி
அது சுடர்விட சுடர்விட உயர் மதி
(அன்பின் சுடர்விழி…
# 42 சொல்லை என்றும் நீங்காத
சொல்லை என்றும் நீங்காத
அர்த்தம் நீ ஆனாய்
அர்த்தம் நூறு கொண்டாடும்
வார்த்தை போல் ஆனாய்
வாக்கியம் போன்ற என் வாழ்வில்
மெய்ப்பொருள் ஆனது நீதான் ஆஆஆ
(சொல்லை என்றும்...
சேலை அல்ல அது ஏந்திடும் ஓலை
பெண்மை அல்ல நீ கவிதைச் சோலை
ஓலையை ஏந்திடும் கவிஞா
செதுக்கிட புது வரி இருக்கா?
வாசிக்க வந்தாயோ என்னை?
படித்தாலும் புறியாதே பெண்மை
(சொல்லை என்றும்...
ரசனை குறையாமல் ராத்திரி பாடம்
தினமும் செய்வாயோ நீ மனப்பாடம்?
உணர்ச்சிகள் உளியாகும் வேலை
சிர்ப்பமும் கிடைக்காதோ நாளை?
இருள் நீக்கி ஒளி வெள்ளம் காட்டு
இசைக்குள்ளே அடங்காதிப்பாட்டு
(சொல்லை என்றும்...
# 41 காற்றே உன் வாசம் என்ன?
ஆண்: காற்றே உன் வாசம் என்ன?
தனியாக வீசிப் பாரு
பிறரை உரசாமல் உன்னில் வாசம் ஏது
அதிகாலை பனியைச் சுமந்தாய்
நிசியில் நீ நிலவைச் சுமந்தாய்
சாலையிலும் சோலையின் தன்மை கொண்டு சென்றாய்
ஏரி வயக்காடு தோப்பு வழி வீசும்
தெக்கு திசை காற்றே
பிறரைத் தொடாது உன்னை மட்டும் வீசு
சுயகுனம் காட்டு
பெண்: காற்றே உன் வாசம் என்ன
தனியாக வீசிப் பாரு
பிறரை உரசாமல் உன்னில் வாசம் ஏது
அதிகாலை பனியைச் சுமந்தாய்
நிசியில் நீ நிலவைச் சுமந்தாய்
சாலையிலும் சோலையின் தன்மை கொண்டு சென்றாய்
ஏரி வயக்காடு தோப்பு வழி வீசும்
தெக்கு திசை காற்றே
பிறரைத் தொடாது உன்னை மட்டும் வீசு
சுயகுனம் காட்டு
ஆண்: கார்காலக் குளிரில் நீ
இதமாக வெப்பமளித்தால்
இயற்கையே இன்பம் ஆகாதோ?
பெண்: அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா?
சோகத்தில் சிரிப்பைத் தேடும்
உனைக்காக்க நான் இருக்க
காற்றிடம் இதம் கேட்பாயா?
ஆண்: நீ என்னருகில் வந்து விளிய
அடி காற்றை விட நீ உயர்ந்தவள்
என் குனமறிந்து நடந்தவள்
உன் இயல்பே இயற்கையிலே இல்லையடி
பெண்: கண் அசைத்தாலே காதல் காற்று வீசுது இங்கே
புன்சிரிப்பாலே காதல் மொழியும் பேசுது இங்கே
ஆண்: அதிர்ஷ்டக் காற்று அத்தனை திசையும் வீசுது இங்கே
(காற்றே...
பெண்: வானோடு ஒட்டியிருந்தால் காற்றுக்கு புனிதம் இல்லை
மண்ணிலே மலரும் ஏங்கிடுமே
ஆண்: பிறர்க்காக வீசுவதால்தான் புனிதம் உண்டு காற்றில் என்றால்
உனக்காக இறங்க முற்படுவேன்
பெண்: நீ காற்றை விடவும் உயர்ந்தவன்
என் உயிரின் மூச்சாய் கலந்தவன்
இந்த தலைகுனிந்த மலரை நிமிர்த்திவிடு
ஆண்: அச்சிலிட முடியா ஆசைகள் என்னை அழைக்கிற நேரம்
ஓன்பது வாசல் கோலம் போட்டு வரவேற்ப்பாகும்
பெண்: உச்சி முகர்ந்தாலே கூசிப்போகும் காதலி தேகம்
(காற்றே...
