உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, October 06, 2005
# 173 காதல் குணம்
என் வசத்திலே இல்லாத பொருளை
இழந்ததுபோல வலிப்பது ஏன்?
சொல்லாத உறவை சுயம்வரத்தாலே
சூடித் தவிக்கிற விசித்திரம் ஏன்?
இது இருந்தும் இல்லாத
இருப்புகொள்ளாத
காதல் மனம்
இது புரிந்தும் புரியாத
முடிந்தும் முடியாத
காதல் குணம்
பந்தலிட்டு காத்திருந்தேனே
எங்கே எந்தன் பூங்கொடியை?
வேறொருவன் மனதை நோக்கி
படர்ந்துவிட்டாளோ தாங்கலையே
பாறை கூட பசுமையாகுமே
பாசம் நிறைய படிஞ்சிருந்தா
வேர் கொடுத்த நிலத்துக்காக
நிழலை விறிக்கும் மரமில்லையா?
ஆசை மட்டும் அணலா அடிச்சும்
அக்கினி கொழுந்து பெருகலையா?
அம்புவிட்ட காமதேவனே
இரு தலைக்கும் உன் குறியில்லையா?
உடமையாக இன்னொரு நெஞ்சை
நம்பிடும் நானும் தருதலையா?
பந்தலிட்டு காத்திருந்தேனே
எங்கே எந்தன் பூங்கொடியை?
வேறொருவன் மனதை நோக்கி
படர்ந்துவிட்டாளோ தாங்கலையே
