உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, September 20, 2005
# 171 கடலோடு கயலாகத்தான்
கடலோடு கயலாகத்தான்
காற்றோடு வயலாகத்தான்
மகிழத்தான் மன்றாடத்தான்
அவள் அத்தான்
அவளைத்தான்
அழைத்தான் அருகே மெதுவாக...
கால் பதியப் பதிய சிணுங்கி வரும்
அந்தக் கொலுசைப் போலே அவள் நெஞ்சம்
இனி கேள்விக்கெல்லாம் விடைதேறும்
எதிர்காலத்துக்கு நினைவாகும்
விரல் படரத்தானே பருவங்கள்
இனி உயரத்தானே புருவங்கள்
(கடலோடு...
ஒரு பால் என்றும் ஓங்கத்தான்
மறு பால் என்றும் இனங்கத்தான்
எனும் சுயநல வேதம் மடியத்தான்
சீர்திருத்தம் என்னும் வெடிவைத்தான்
ஒரு பிடியில் இருவர் சிக்கத்தான்
இந்த உறவுக்கோலம் விளைவித்தான்
சுய உரிமைக்கிங்கே இடமேது
சம உரிமை வகுத்தால் பண்பாடு
(கடலோடு...
