உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, September 29, 2005
# 172 இலையுதிர் காலம்
என்னாச்சு?
எங்கெங்கும் வண்ண மயம் வந்தாச்சு
பச்சை இலைகளும் பொன்னாகி
பவளம் பழுப்பென்று போயாச்சு
இனி இலையுதிர் காலம்
இரவிடம் பகல் தேயும்
வாடைக் காற்றின் தீண்டலை
ஆசைக் காதல் தூண்டலை
கொண்டாடு கொண்டாடு
ஆடை மாற்றும் சோலையை
ஓடிப்போன கோடையை
கொண்டாடு கொண்டாடு
இயற்கையும் இளைப்பாரி
உடல் தணியும் காலம்
மூடுபனி நாட்களை
பாதையோரப் பூக்களை
கொண்டாடு கொண்டாடு
ஓடத் தடம் பார்த்ததும்
ஏரிக்காரி புன்னகை
கொண்டாடு கொண்டாடு
