<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
 
#7 தித்திப்பாய் பார்ப்பாய்
பெண்:
தித்திப்பாய் பார்ப்பாய்
தீப்பிழம்பாய் நான் எரிய
ரெட்டிப்பாய் ஆகிடுமே
என் சுவையும் நீ சிரித்தால்

ஆண்:
உறவுப்பாய் விரித்தாலும்
கவனிப்பாய் அரவணைப்பாய்
வெதவெதப்பாய் நான் இருக்க
கொஞ்சம் வந்து தீயனைப்பாய்

பெண்:
இரவெல்லாம் கண்விழிப்பாய்
பகலெல்லாம் நினைவிழப்பாய்
ஆசையெனும் தீ வளர்ப்பாய்
அலை கடல் போலே தத்தலிப்பாய்

(தித்திப்பாய்

ஆண்:
வானமெல்லாம் மிதப்பாயோ
போட்டிக்கு நிலவை அழைப்பாயோ
கண் சிமிட்டி கலிப்பாயோ
நட்சத்திரமே நகைப்பாயோ

பெண்:
எண்ணமெலாம் சேகரிப்பாய்
கவிதைகளாய் நீ வடிப்பாய்
உள்ளத்திலே இடம் பிடிப்பாய்
உன்னது என்று கணக்கெடுப்பாய்

(தித்திப்பாய்

ஆண்:
கவலையெல்லாம் துறப்பாயோ
காதலிலே திலைப்பாயோ
இதழை இதழால் பறிப்பாயோ
இன்னும் என்னை மறுப்பாயோ

பெண்:
கொடுத்ததெல்லாம் அனுபவிப்பாய்
மேலும் மேலும் கேட்டிருப்பாய்
உன் விடையில் என் விடை ஒளிப்பாய்
என்னை என்று கை பிடிப்பாய்

(தித்திப்பாய்

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com