உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 05, 2004
புதுயுகப் பிரசவம்
இருட்டை எதிர்த்து
மோதி
பிரகாசித்து
சில நொடிகளில்
மடியும்
தீக்குச்சி தீபங்கள்போல்
உண்மை
அவ்வப்பொழுது உலவாலியென
உருவெடுத்து உதிரும்,
பாசாங்கு உலகின்
பரிமாறல்களில்
இந்த தற்காலிக
தீபங்களின் ஒளியைச்
சேகரித்து சொந்தமாக
ஒரு சூரியன் செய்து
ஒரு அமாவாசை இரவில்
பட்டமெனத் திரித்து
வானமேற்றினால்…
காலம் நேரம்
சந்தர்ப்பம் சூழ்நிலை
என்று கைகோர்த்து நிற்கும்
நியதிகளின் விதிமுறைகள்
சிதறிடும்.
பிறகு தொடங்கத்தானே வேண்டும்
புது யுகம்?
Comments:
Post a Comment
