உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
# 6 கடந்து போகும் நொடிகளிலே
கடந்து போகும் நொடிகளிலே
நினைவாகும் சில கனங்கள்
சில கனங்கள் அகற்றிவிட்டால்
மனமெங்கும் வெற்றிடங்கள்
வெற்றிடங்கள் வாழ்வுபெற
வாலிபத்தின் வைபவங்கள்
வைபவங்கள் நிறைவுபெற
சந்தர்ப்பம் சூழ்நிலைகள்
சூழ்நிலைகள் அமைந்திடுமுன்
இடைமறிக்கும் விதிமுறைகள்
விதிமுறைகள் வழிவகுத்தால்
சரணடையும் சுதந்திரங்கள்
சுதந்திரங்கள் பறிகொடுத்தால்
கால்நடைபோல் மனிதர்கள்
மனிதர்கள் சீர்பெறவே
சமநிலைகள் வரவழைப்போம்
வரவழைப்போம் புரட்சியிங்கே
சொன்னவர்கள் கல்லரையில்
கல்லரையில் கதை முடிந்தும்
நினைவெழுதும் புது வரிகள்
