உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 06, 2004
பருவம்
கொட்டிவிடும் ஆசை
குவிந்து கிடக்க
பெற்றுவிடும் ஆர்வம்
பெருகி நிற்க
கண்களால் துழாவி
காயம் செய்து
ஆசையென்னும் சீழ் கசிய
நெஞ்சுறுத்தும் குற்ற உணர்ச்சி
பசை இழந்து
புதைமணலாய் சரிய...
அச்சாணி கழண்ற
அதிவேகச் சக்கரங்கள்
ஓடையில் வீழ்ந்து இளைப்பாரிட...
பாதை மாறியதைப்பற்றி
தலைகுனியுமா
அல்லது வேகம் நிறைவேற்றிய
தணிப்பில் திளைக்குமா?
பருவக் கோளாறு என்று
பிதற்றுவது
படைத்தவனின்
கவனக்குறைவிற்குச் சப்பைக்கட்டு
Comments:
Post a Comment
