உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, February 12, 2006
# 188 ஏகலைவன்
நான் ஏகலைவனா இல்லரத்திலே சொல்வாய் சேதி
அனுமதியின்றி வழிபடவா உனை அடைந்தேன் தோழி?
குருவென்பதால் துரோனன் கேட்ட காணிக்கை போல் நீ
என் காணிக்கை என்னவென்று கேட்பாய் தோழி?
அருகதையின்றி சீடனாகியே விரலிழந்தான் அன்று
அனுமதி கொண்டும் அழைப்பில்லாது அகம் கசந்தேன் இன்று
போர்த்தொடுக்கவோ பின்வாங்கவோ எதுதான் நீதி?
தீக்கொழுந்துபோல் தீண்டும் நெஞ்சே கொடுத்தாய் தோழி
வீரம் தந்து பின் வாளைக் கொய்தால் உயிர்க்காதாவி
மாலை கண்டுமே இரவு தனித்தால் முறையா தோழி?
