உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 28, 2004
# 156 எட்டுத் திக்கும் எட்டிவிட (aka Wedding Song)
பாடல் தலைப்பை அழுத்தினால், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்தின் இணையத் தளத்தில் இந்தப் பாடலின் இசை வடிவம் அடங்கிய பகுதிக்கு கொண்டு செல்லும்!
எட்டுத் திக்கும் எட்டிவிட பிறந்தது நாயண ஓசை
கெட்டி மேளம் கொட்டிவிட கூடிடும் ஆயிரம் ஆசை
இது திருமணம் இதில் இரு மனம்
தாம் இணைந்தபின் வாழ்வில் நறுமனம்
சுகம் தருபவர் யார் பெருபவர்
தீர்ப்பளித்திடும் சுபதினம்
(எட்டு...
ஒன்றுபட்ட நெஞ்சங்கள் ரெண்டும் இங்கே கூடுது
சொர்கத்தின் விருப்பம்தானோ சடங்காய் இங்கே நிறைவேறுது
மூன்றுமுடி போட்டவனுக்கு நான்கு குனம் கிடைக்குது
ஐம்புலன்கள் சாட்சியாய் உறவிங்கு பூத்தது
சுதியோடு சந்தத்தில் செந்தமிழும் சேர்ந்தது
மாங்கல்யம் மந்திரம் ஓதி வானவரை வேண்டுது
அலங்காரச் சின்னமாய் இருவரும் வலம் வர
கல்யாணம் காதலுக்கு மரியாதை கொடுத்தது
(எட்டு...
அட்சதையை போடத்தானே தெய்வம் மழையைப் பொழியுது
ஆறுமாத காதலை ஏழ்பிறப்பும் இணைத்தது
எட்டுதிக்கும் ஒளிவீசி நவரத்திணமும் ஜொலிக்குது
பத்துமாதம் கடந்ததும் தொட்டில் சத்தம் கிடைக்குது
அலைமோதும் ஆசைவிழிகள் அடங்காமல் தவிக்குது
அவகாசம் கொடுத்து ஏனோ பரிகாசம் செய்யுது
மருதாணி மஞ்சத்தில் மெதுவாக மறைந்தது
மணமகளின் முகத்தில் ஏனோ செந்தூரம் கலந்தது
கல்யாணம் காதலுக்கு மரியாதை கொடுத்தது
(எட்டு...
Sunday, May 23, 2004
# 155 தாழ்வான மனப்பான்மை
தாழ்வான மனப்பான்மையால் தமிழும் தேய்கிறதே
பொருள் நீங்கிய பாடலாலே இசையும் சாகிறதே
தாளத் தருநகம் தைத்த பைக்குள் வார்த்தை வனவாசம்
நாக்கொன்றிருந்தால் பாடிப் படுத்திட இதுதான் அவகாசம்
இதயத் துடிப்பை இருமடங்காக்கி முழங்கும் பானியிலே
கரடுமுரடாய் வார்த்தைச் சிரங்கு இசையின் மேனியிலே
இசையும் குரலும் இறக்குமதியாம் இன்று புரிகிறது
இன்றைய இசைக்கு இறக்கிவை மதியை என்பது தெரிகிறது
சந்தம் என்பது சந்தடி சாக்கில் காணா போகிறது
இந்தி ஆங்கிலம் கூச்சல் சேர்த்திட கானா வாழ்கிறது
குரல் நயமா? கர்னாடகம் நீ, கச்சேரி போய் கேளு
குரல்வளை நெறுக்கக் கதறும் பேடுக்குக் கோடி மதிப்பீடு
அண்ட வந்தவர்க்கு அடைக்களம் கொடுத்தது அன்றைய பன்பாடு
உண்ட மண்ணையும் உரிய மொழியையும் உமிழ்வது புதுப்பாடு
