உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 14, 2004
# 154 ஆழ்கடலில் நான் பயணித்தேன்
ஆழ்கடலில் நான் பயணித்தேன்
திசைகாட்டும் கருவி இல்லாது
ஒரு வாக்கு மீறிப் போயும்
உள்ளம் அன்பில் குறையாது
குரல் கேட்கும் வாசலிலே உருவங்கள் இருக்காது
பெருவெள்ளம் பெருகிவரும் இடி மழையே பொழியாது
சிகிச்சைகளும் செய்து விட்டேன் நோய் பற்றித் தெரியாது
காயங்கள் தெரிவதில்லை வலி மட்டும் மறையாது
(ஆழ்கடலில்...
எரிமலையில் வசித்தாலும் குளிர்காய்ச்சல் எனை வாட்டும்
பனிவெளியில் உருண்டாலும் தீ நெஞ்சைக் குளிப்பாட்டும்
சுதந்திரமாய் உடல் திரிந்தும் மனதிற்கு சிறைவாசம்
சதுரங்க ஆட்டத்திலே எனைச் சுற்றி எதிர்கூட்டம்
(ஆழ்கடலில்...
