உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, October 21, 2005
# 177 மஞ்சக் கறை
ஆண்:
சிங்காரச் சிட்டே நீ சூடிக்கிடத்தான்
வாங்கிவந்தேன் வாசமல்லி
கதவைத் தெறடி
பெண்:
ஆசையா நீ பேசிப் பேசி
மோசம் பன்னுற
வாசப்படி ஏறுனா
நான் வெட்டிப்புடுவேன்
ஆண்:
அய்யோ, நான் என்ன செஞ்சேன்
சொல்லிப்போடடி
அக்கம்பக்கம் பாக்குறாங்க
கதவைத் தெறடி
பெண்:
நான் மஞ்ச பூசித்தான்
நாளாகுதே
உன் சட்டை மஞ்சக் கறை
ஏன் காட்டுது?
திருப்பாச்சி எடுத்து
தீட்டி வெச்சிட்டேன்
வாசப்படி ஏறுனா
நான் வெட்டிப்புடுவேன்
ஆண்:
வண்ணாத்தி சட்டையில
வெச்ச கறைதான்
உன் சந்தேகப் புத்தியால
மிச்ச கதைதான்
பொள்ளாச்சி சந்தையில
கேட்டுப் பாரடி
என் பேரைச் சொல்லி
ஊரைச் சொல்லி
கேட்டுப் பாரடி
பெண்:
முழுக்கை சட்டையில
மஞ்சள் உண்மையா?
நீ நம்பச் சொல்லி
கெஞ்சுற கெஞ்சல் உண்மையா?
ஆண்:
எங்கிட்ட ஏதடி
முழுக்கை சட்டை?
அது போனவாரம் வந்து போன
உங்கொப்பன் சட்டை
வாசமல்லி வாடுமுன்னே
வாங்கி வெய்யடி
வஞ்சதுக்கு வக்கனையா
ஈடு செய்யடி
பெண்:
எங்கப்பன் உன்னைப்போல உத்தமரா?
இல்லை ஆத்தாளை திருப்பாச்சி
தீட்டச் சொல்லவா?
ஆண்:
பொல்லாப்பு செஞ்சதால
வந்த மஞ்சளா?
உன் காமாலைக் கண்ணுனால
வந்த மஞ்சளா?
நல்லதே நீ நெனைச்சா
நிம்மதி புள்ளை
பொல்லாங்கு பேசினா
பொழப்பே தொல்லை
Wednesday, October 19, 2005
# 176 அன்பே...
இன்ப கூடம்தான்
இரவு நேரம்தான்
கண்கள் கோர்த்தோமே?
அன்பே...
ஆடி வா என்று
தாளம் கேட்காதோ?
கால்கள் பேசாதோ?
அன்பே...
சுழலும் காற்றோடு
அசையும் நாற்றாக
உடலும் ஆடத்தான்
மனதும் கூடத்தான்
இன்ப எல்லைகள்
இன்று மீறத்தான்
கொஞ்ச நேரம்தான்
துன்பம் தூரம்தான்
சொந்தம் ஆவாயோ?
சோர்ந்து போவாயோ?
இன்ப கூடம்தான்
இரவு நேரம்தான்
இடை இணைந்தோமே?
அன்பே...
பன்பாடு நாளும் மாறுதே
முகவுரை அன்று மண நாளிலே
அறிமுகம் இன்று முடிவுரை ஆனதே
ஏன் அன்பே?
சந்தித்தோம் இன்ப ஊரிலே
நேசித்தோம் ஆடல் பேரிலே
விடைபெறுவோம் தனிமைத் தீவிலே
ஏன் அன்பே?
எம்மனதை யார்தான் சேரவோ?
யார் துயிலை யார்தான் போக்கவோ?
அசைந்தாடும் உடல்கள் மத்தியில்
அசைபோட்டேன் சுருங்கும் நெற்றியில்
எப்பாதை விரிந்த போதிலும்
இக்கோதை எந்தன் விழிகளில்
தப்பாமல் இருக்கப் போகிறாள்
சொன்னேன்
எழுதி வை
இன்றே
எழுதி வை
இன்ப கூடம்தான்
இரவு நேரம்தான்
கண்கள் கோர்த்தோமே?
அன்பே...
ஆடி வா என்று
தாளம் கேட்காதோ?
கால்கள் பேசாதோ?
அன்பே...
Tuesday, October 18, 2005
# 175 என் வானின் கிழக்கே
சிகரம் நீ
சிறகும் நீ
வழிகாட்டிதான் இங்கு
வாய்க்கவில்லை
என் இதயமொழி
ஒலிபரப்பை
ஏற்கலையா உன் அலைவரிசை?
என் வானின் கிழக்கே
எனைச் சேர்ந்திட
வழக்கேன்?
என் உள்ளுலகின்
விடியற்காலம்
உன் செவி மயங்கி
சாயும்காலம்
