உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, November 10, 2005
# 181 வழக்கத்தின் சேவை
நதி செல்லும் பாதை
வழக்கத்தின் சேவை
விருப்பத்தின் திசை வேறிடம்
விதி செய்த கோலம்
நட்பென்னும் வேடம்
மனதிற்குள் ஆசை ஊறிடும்
சொல் தென்றலே...
ஏன் இப்படி?
என் கைப்படும்
மலர்
தோள் சேராது போல்
நிர்பந்தம்?
நதி செல்லும் பாதை
வழக்கத்தின் சேவை
விருப்பத்தின் திசை வேறிடம்
வக்கிரமாய் மனம் அசைபோடும்
அக்கிரம ஆசை நூறு
சொக்கிடு வசியப் பார்வையில்
தேனே...
செல்வோமா வேறு ஊர்?
உருவாவோம் வேறு பேராய்
பழங்கதைகள் அங்கே ஏதடி?
தோழி கூறடி
நீதான் காதலி
ஆள் மாறாததா
நிர்பந்தம்?
நதி செல்லும் பாதை
வழக்கத்தின் சேவை
விருப்பத்தின் திசை வேறிடம்
