<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 27, 2004
 
# 100 மானிட ஆற்றலை
மானிட ஆற்றலை மதிப்பிடும்போது
எடைகோல் ஆவது ஊதியம்தானோ?
கற்பனைக் காவியம் படைத்திருந்தாலும்
விற்பனைக்கொவ்வாத கலையும் வீண்தானோ?

கலைப்பாதை பயணம் போராகுமே
கமலத்தின் சூழல் சேராகுமே
எடைபோடலாம், ஈடாகுமா கலைஞானமே?
கலைவானில் சிறகுக்கு விலையில்லையே
விலைபேசும் உள்ளத்தில் கலையில்லையே
கல்லரையில் முடியும் காசின் கதை
சில்லரைக்கொவ்வாது மனிதச் சிதை
காலமும் வாழுமே கலையின் விதை

வேண்டா வரமா?
தீரா தவமா?
ஓயா தேடல்தானா?

தேக்கத்தை தேடாத நீர்வீழ்ச்சி போல்
கலைவாழும் நெஞ்சில் உயிரோட்டமே
பயின்றாலே பலனாகும் பிரவாகமே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com