<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 01, 2004
 
# 103 விஸ்வநாதனுக்கு என் வார்த்தை விசில்
மனதிலே குதூகலம் உனதிசை கேட்டு
உணர்வெலாம் உவமையாய் ஒலித்திடும் பாட்டு

சொந்த மண்ணின் ராகங்கள்
சொர்க வாசல் காட்டிடும்
தூர தேச வாத்தியம்
தாய்மொழிக்குப் பாயிடும்

மனதிலே குதூகலம் உனதிசை கேட்டு

மொட்டவிழ்த்த பந்தல்போல்
மெட்டவிழ்த்த மாயனே
ஏழு சுர எளிமையில்
ஏழு லோக ராஜ்ஜியம்

மூங்கில்காட்டு தென்றல்
மெல்லிசைமன்னர்
மகுடியாய் ஆனதோ?

கவரி வீச லகரியாய்
மாற்றும் மகிமை அவரிசை

அவர் இசைக்கடலில் செவி வலை
சேகரித்தது முத்துக்களே
நினைத்திரா ஆனந்தம்
நிகழ்த்துவார் காலமும்

விஞ்ஞான வசதி இன்றி
மெய்ஞ்ஞான இசை
எப்படித்தான் இசைத்தாரோ?

நாத விஸ்வரூபமே
விஸ்வநாதனே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com