<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 27, 2004
 
# 93 தொலைவிலே ஒலிக்குதே
தொலைவிலே ஒலிக்குதே
தென்னை தலை அசைக்குதே
இது தென்றலின் ரகசியம்
இதில் சோலையெல்லாம் வசியம்

அந்த ஓடைக் குயிலும்
ஒரு பாடல் புனையும்

இந்தக் கொன்றை மரம்
குலுங்கி பூக்கள் வரும்

இயற்கையே இசை மயம்
நாம் ஓய்ந்ததும்


பகல் நேரம் நமை அனுசரித்து
நடமாட்ட இம்சைகள் பொருத்து

தனைக் காக்கிறாள் பூமித் தாயே

நெடுஞ்சாலை வாகனக் கிளர்ச்சி
தொழிற்சாலை புகையிலும் மலர்ச்சி

தினம் காட்டுவாள் பூமித் தாயே

நூதனம் போற்றிடும் மானிட வாழ்வால்
கீழ்த்தரம் ஆகுதே வானவர் சீதனம்

மெய்ஞானம் வாழுமோ?
விஞ்ஞானம் வாழுமோ?

கேள்வி கேட்டும் வியக்கிறேன்
இயற்கை புதிதாய் பிறக்குமா?

புணலின், ஓடையின் ஓட்டத்தை
மனிதச் சிறுமை பூட்டுமா?

சேய் மாறிப் பொனாலும் தாய் மாறா நீதி
ஏற்றம் தந்த தியாகி
சீற்றம் கொள்ளா சாதி
நீயே இங்கு நாதி
வாடா துந்தன் ஜோதி


காடாக வான் நோக்கி நீ வாழ்ந்து பார்த்தும்
பிரசுரத்தில்
உன் கதை முற்றும்

பாறைக்குள் தீயும் உறங்கும்
புதைமணலில் பதுங்கும் நிலமும்

ஏரிக்குள் நாரை அழகும்
இரையாகும் மீணின் துயரம்

ஒளி உண்டானதும் கூடவே
நிழல் உண்டானது உண்மையே

பொன்னானது என்று போற்றவோ?
பொல்லாதது என்று தூற்றவோ?

எந்நாளும் தேடித் தேடியே
என் நாட்கள் போக்க வேட்கையே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com