<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 27, 2004
 
# 98 நகரம்
நகரம் மாலையில் பூத்து
குலுங்கும் மின்சாரத் தோட்டம்
நடமாட்டம் எங்கும் உயிரோட்டம் இதயமே இளைய பருவமே
கடைவீதி வாகனம் விண்மீண்கள், புவியோ விண்வெளி

நகரம் மாலையில் பூத்து
குலுங்கும் மின்சாரத் தோட்டம்


தொழிற்சாலை புகைமூட்டங்கள் நாகரீக முகிலோ? ஏற்றம் தந்த வடுவோ?
உணவு விடுதி சமையல் மணப்பது தென்றல் சேர்த்த சுவையோ? நகரில் ஈக்கள் வண்டோ?

குற்றச்சாட்டு இதுவோ? காட்சி, காண்பவர் பொருத்ததோ?
கிராமம்தான் பிறந்த வீடோ? நகரம்தான் புகுந்த வீடோ?

அட இருக்கும் இடம்தான் இன்பம்
நாம் வசிக்கும் இடத்தை வாழ்த்துவோம்

நகர், கிடைத்த காணிக்கை
உணர்வாய் நீ


சமுதாயம் சேர்ந்ததெலாம் நதிக்கரையில்தானே? முன்னேற்றம் நகரே?
காலச் சுழலில் வேகம் பிறந்தது விஞ்ஞானம்தானே?
விரைவில் வளர்ச்சிதானே?

காணல் பசுமையா கண்டோம்? பழம் பழக்க வசியத்தால் தேங்கினோம்
இயற்கை ஒன்றுதான் வழியோ? செயற்கை என்பதே அழிவோ?

இந்த வாதமே வீண்தானா?
காலச் சக்கரம் திரும்புமா?

நகர், முன்னேற்ற சின்னம்
உயர்வாய் நீ
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com