<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 12, 2004
 
# 41 காற்றே உன் வாசம் என்ன?
ஆண்: காற்றே உன் வாசம் என்ன?
தனியாக வீசிப் பாரு
பிறரை உரசாமல் உன்னில் வாசம் ஏது

அதிகாலை பனியைச் சுமந்தாய்
நிசியில் நீ நிலவைச் சுமந்தாய்
சாலையிலும் சோலையின் தன்மை கொண்டு சென்றாய்
ஏரி வயக்காடு தோப்பு வழி வீசும்
தெக்கு திசை காற்றே
பிறரைத் தொடாது உன்னை மட்டும் வீசு
சுயகுனம் காட்டு

பெண்: காற்றே உன் வாசம் என்ன
தனியாக வீசிப் பாரு
பிறரை உரசாமல் உன்னில் வாசம் ஏது

அதிகாலை பனியைச் சுமந்தாய்
நிசியில் நீ நிலவைச் சுமந்தாய்
சாலையிலும் சோலையின் தன்மை கொண்டு சென்றாய்
ஏரி வயக்காடு தோப்பு வழி வீசும்
தெக்கு திசை காற்றே
பிறரைத் தொடாது உன்னை மட்டும் வீசு
சுயகுனம் காட்டு

ஆண்: கார்காலக் குளிரில் நீ
இதமாக வெப்பமளித்தால்
இயற்கையே இன்பம் ஆகாதோ?

பெண்: அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா?
சோகத்தில் சிரிப்பைத் தேடும்
உனைக்காக்க நான் இருக்க
காற்றிடம் இதம் கேட்பாயா?

ஆண்: நீ என்னருகில் வந்து விளிய
அடி காற்றை விட நீ உயர்ந்தவள்
என் குனமறிந்து நடந்தவள்
உன் இயல்பே இயற்கையிலே இல்லையடி

பெண்: கண் அசைத்தாலே காதல் காற்று வீசுது இங்கே
புன்சிரிப்பாலே காதல் மொழியும் பேசுது இங்கே

ஆண்: அதிர்ஷ்டக் காற்று அத்தனை திசையும் வீசுது இங்கே

(காற்றே...

பெண்: வானோடு ஒட்டியிருந்தால் காற்றுக்கு புனிதம் இல்லை
மண்ணிலே மலரும் ஏங்கிடுமே

ஆண்: பிறர்க்காக வீசுவதால்தான் புனிதம் உண்டு காற்றில் என்றால்
உனக்காக இறங்க முற்படுவேன்

பெண்: நீ காற்றை விடவும் உயர்ந்தவன்
என் உயிரின் மூச்சாய் கலந்தவன்
இந்த தலைகுனிந்த மலரை நிமிர்த்திவிடு

ஆண்: அச்சிலிட முடியா ஆசைகள் என்னை அழைக்கிற நேரம்
ஓன்பது வாசல் கோலம் போட்டு வரவேற்ப்பாகும்

பெண்: உச்சி முகர்ந்தாலே கூசிப்போகும் காதலி தேகம்

(காற்றே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com