<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 12, 2004
 
# 45 நாத நயம்போல் உந்தன் விழி
ஆண்:
நாத நயம்போல் உந்தன் விழி
இமை அசைத்தாலே இதயம் பலி

(நாத...

பெண்:
வாழ்கைப் பாதை வகுத்தது யாரோ
நம் வழி இங்கே இணைகிறது

ஆண்:
காற்றைச் சேர்ந்த தாழை மலர்போல்
காதலர் மூச்சும் ஒன்றிடுதே

பெண்:
மலர்ந்திடும் மோகம்…
மலர்ந்திடும் மோகம் புது உணர்ச்சி
விரல்களும் தேட ஒரு கிளர்ச்சி

ஆண்:
வலம்புரிச் சங்கு முழங்குது இங்கு
வசந்தமும் விரைவில் வரும் அருகே
உறவே தனிமை மறந்துவிடு

(நாத...

ஆண்:
ஆயிரம் அர்த்தம் பேசிடும் கண்ணில்
என் நிழலாட நான் பணிந்தேன்

பெண்:
ஆத்திர நாயகன் வேடம் கலைந்து
ஆசையின் ஆழ்கடல் மூழ்கிட வா

ஆண்:
வழிப்பறி செய்தாய்…
வழிப்பறி செய்தாய் மனமுவந்தேன்
களிப்பினில் கூட கண் துடைத்தேன்

பெண்:
புதை மனல் வாழ்வில் உயிர்கரம் நீயே
காத்திடும் உன்னை நான் காக்க
இல்லறம் நிரந்தரம் ஆகட்டுமே

(நாத...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com