<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 12, 2004
 
# 43 அன்பின் சுடர் விழி
பெண்:
அன்பின் சுடர் விழி சுடர் விழிதான்
காதல் தோழா

ஆண்:
ஆசை தவிக்குது தவிக்குது பார்
பார் தோழி

தீயில் கொதிக்கும் நீர் உடலா?
நீரைக் கொதிக்கும் தீ மனதா?
தீயில் கொதிக்கும் நீர் உடலா?
நீரைக் கொதிக்கும் தீ மனதா?
மூலத்தைப் பார்க்காமல் மோகத் தீ ஏற்று

பெண்:
தீயில் கொதிக்கும் நீர் உடலா
நீரைக் கொதிக்கும் தீ மனதா
மூலத்தை பார்க்காமல் மோகத் தீ ஏற்று

(அன்பின் சுடர்விழி…

பெண்:
தீயோ பிறந்தது கல் உரச
காதல் பிறந்தது கண் உரச
தீ கொழுந்தே வா வா
உறவுத் திரி ஏங்க

ஆண்:
தீ கொண்டு சமைத்தான்
முதல் உணவு
காதலில் சமைப்போம்
நம் உறவு

தகிக்கிறதே வா வா தகிக்கிறதே வா வா

பெண்:
ஆயுதம் தீட்டிட தீ உதவும்
ஆசை தீட்டிடவா
தீண்டிடவா வா வா
தீக்குளிப்போம் வா வா

ராமன் கேட்க தீக்குளித்தாள்
சீதை என்ற ஓர் அரசி

அது பழங்கதை பழங்கதை பழங்கதை

(அன்பின் சுடர்விழி…

ஆண்:
ஆண்கள் இயற்றிய தீய சதி
பெண்கள் உடன்கட்டை ஏறும் சத்தி
நம் முன்னோர்கள் தீயவறா?
நீயும் நானும் விதிவிலக்கா?

பெண்:
கல்லில் உறங்கிடும்
தீப்பொறிபோல்
மனிதனின் மனதில்
தீமை உண்டு

அதை எரிப்போம் வா வா வேள்வித் தீ வா வா

ஆண்:
காதல் வகுப்பது புரட்சிக் கணல்
கடந்த காலம் கரிசல் மணல்
கடைபிடிப்போம் வா வா
மறுமலர்ச்சி வா வா

இருட்டறை உலகின் வெளிச்ச வழி
வகுப்பறை வகுத்த ஞாண ஒளி

அது சுடர்விட சுடர்விட உயர் மதி

(அன்பின் சுடர்விழி…
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com