<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, October 21, 2005
 
# 177 மஞ்சக் கறை
ஆண்:
சிங்காரச் சிட்டே நீ சூடிக்கிடத்தான்
வாங்கிவந்தேன் வாசமல்லி
கதவைத் தெறடி

பெண்:
ஆசையா நீ பேசிப் பேசி
மோசம் பன்னுற
வாசப்படி ஏறுனா
நான் வெட்டிப்புடுவேன்

ஆண்:
அய்யோ, நான் என்ன செஞ்சேன்
சொல்லிப்போடடி
அக்கம்பக்கம் பாக்குறாங்க
கதவைத் தெறடி

பெண்:
நான் மஞ்ச பூசித்தான்
நாளாகுதே
உன் சட்டை மஞ்சக் கறை
ஏன் காட்டுது?

திருப்பாச்சி எடுத்து
தீட்டி வெச்சிட்டேன்
வாசப்படி ஏறுனா
நான் வெட்டிப்புடுவேன்

ஆண்:
வண்ணாத்தி சட்டையில
வெச்ச கறைதான்
உன் சந்தேகப் புத்தியால
மிச்ச கதைதான்

பொள்ளாச்சி சந்தையில
கேட்டுப் பாரடி
என் பேரைச் சொல்லி
ஊரைச் சொல்லி
கேட்டுப் பாரடி

பெண்:
முழுக்கை சட்டையில
மஞ்சள் உண்மையா?
நீ நம்பச் சொல்லி
கெஞ்சுற கெஞ்சல் உண்மையா?

ஆண்:
எங்கிட்ட ஏதடி
முழுக்கை சட்டை?
அது போனவாரம் வந்து போன
உங்கொப்பன் சட்டை

வாசமல்லி வாடுமுன்னே
வாங்கி வெய்யடி
வஞ்சதுக்கு வக்கனையா
ஈடு செய்யடி

பெண்:
எங்கப்பன் உன்னைப்போல உத்தமரா?
இல்லை ஆத்தாளை திருப்பாச்சி
தீட்டச் சொல்லவா?

ஆண்:
பொல்லாப்பு செஞ்சதால
வந்த மஞ்சளா?
உன் காமாலைக் கண்ணுனால
வந்த மஞ்சளா?

நல்லதே நீ நெனைச்சா
நிம்மதி புள்ளை
பொல்லாங்கு பேசினா
பொழப்பே தொல்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
I have been looking for sites like this for a long time. Thank you! » » »
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com