<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, August 09, 2004
 
# 161 மரிக்கொழுந்தே...
மரிக்கொழுந்தே
நுகர நுகர வளரும் வசியம்
உரச உரச மனசு மசியும்
இதயமே இரவலா?

மரிக்கொழுந்தே
மரிக்கொழுந்தே

தெக்கு திசைதான் எப்போதும் தென்றல் வீசும் திசையாகும்
திக்கு தெரியா மயக்கத்திலே மணம் தேடி அது வீசும்
இது சரியா, முறையா?
விதி சரியா விதி முறையா?
வழி பிடிபடாமலே நழுவிப் போகிற மாயை இந்த முகையா?

தேடத் தேட தெளிவாகும்
நாடுவதா பொருளாகும்?
வலையை வீச குறிமாறும்
மீனைப் போல மெய்ஞானம்

இந்த தென்றல் தேடப் பொய்யாகும்
மரிக்கொழுந்தே...

வளைஞ்சுதான் குடுக்கிற வானவில் நான்
வளைஞ்சுதான் குடுக்கிற வானவில் நான்
அகலமா விரியிற அலைகடல் நீ
கைப்பிடி ஆகப் பாத்தா
கடலுக்குக் கோபம் ஆத்தா
உன்னைத்தூக்க வாரேன் புள்ளை
என்னை விட்டா ஆள்தான் இல்லை

அலைகளா பாயிற நாக்குதான் மடியாது
மூழ்காம மெதக்குறேன் நான் எப்படி ஆளு?
பிடிபடப் போறியா? அடிபடப் போறேனா?
பொறுத்துதான் பாப்பமே கனியுமா காலமே

மரிக்கொழுந்தே...

வேட்டைய விரும்பிற மானுங்க ஏது?
வேடனா என்னை நீ பாப்பதும் தீது?
புரியாததின் மேல் கோபமா?
புலனாய்வு செஞ்சா பாவமா?
கூடலை விரும்பிடும் கூக்குரல் கேக்குமா?
ஆசையின் அழைப்பிதழ் அப்புரம் ஏற்குமா?
விடியிற வேளை பாத்து கருக்கிற மேகமா?

மரிக்கொழுந்தே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
Getting this Orchestrated Udhaya with a friend of mine.
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com