உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, January 02, 2009
# 272 புத்தாண்டு
காலதேவதையின் பாதையில்
இன்னொரு கல்
எதிர்பார்ப்புகளுக்கும் ஏக்கங்களுக்கும்
புத்துயிர்
பழமைக்கு கொடும்பாவி
புதுமைக்கு தாலாட்டு
தோல்விக்கு மறதித் தைலம்
வெற்றிக்கு பண்டிகை நாள்
உறவுக்கு உறுதி சேர்க்கும்
அடிமண்
தனிமைக்கு தழும்பு சேர்க்கும்
தவம்
முதுமையின் மதியில்
இன்னுமோர் சிலந்திவலை
இளமையின் அனுபவத்தில்
இன்னுமோர் பரிசு
வாழ்வுடன் மறுபடியும்
ஒரு ஒப்பந்தம்
நினைவிற்கு இன்னொரு
சுரங்கம்
Comments:
//தோல்விக்கு மறதித் தைலம்
வெற்றிக்கு பண்டிகை நாள்
உறவுக்கு உறுதி சேர்க்கும்
அடிமண்
தனிமைக்கு தழும்பு சேர்க்கும்
தவம்
//
எத்தனை அழகாய் சொல்லியிருக்கீங்க!
கோர்த்து வைத்துக்கொள்கிறேன் என் வாழ்வின் தினசரிகளில் அணிந்துக்கொள்ள ஆர்வத்துடன்....!
:))))
Post a Comment
வெற்றிக்கு பண்டிகை நாள்
உறவுக்கு உறுதி சேர்க்கும்
அடிமண்
தனிமைக்கு தழும்பு சேர்க்கும்
தவம்
//
எத்தனை அழகாய் சொல்லியிருக்கீங்க!
கோர்த்து வைத்துக்கொள்கிறேன் என் வாழ்வின் தினசரிகளில் அணிந்துக்கொள்ள ஆர்வத்துடன்....!
:))))
