உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, March 26, 2008
# 256 சுயவிலாசக் கடிதம்
என் பாட்டை மிகையாக போற்றியவருண்டு
வகையாக வசைபாடித் தூற்றியவருண்டு
புரிந்தும் புரியாமல் புன்னகைத்தோருண்டு
கடமைக்குக் கைதட்டியோ
நட்புக்கு நகைத்தோ
எத்தனையோ விதத்தில் விமர்சித்தோருண்டு
வழியனுப்ப வந்தோரை நம்பித்தானா
யாத்திரை நடக்கின்றது?
வழக்கத்தை, ஒழுக்கத்தை நம்பித்தானா
புரட்சி இருக்கின்றது?
என் ஆற்றல் நான் அறிவேன் ஆணவமில்லை
என் மனக்கண்ணாடி பொய் சொன்னதில்லை
முயற்சி என் முள்கிரீடம்
பயிற்சி என் பள்ளியறை
கலைத் துரோணர் குருகுலத்தில்
இடம் கிடைக்குமென்று
இந்த எழுதுகோல் ஏகலைவன்
எதிர்பார்த்ததில்லை
Comments:
எல்லாம் சரிதான். பிழையில்லாமல் எழுதுபவரை நம்பித்தான் தமிழ் இருக்கிறதா என்ன?
- ஆணவம் - 3 சுழி ண
- பள்ளியறை - பள்ளியரை அல்ல.
- துரோணர் - துரோனர் அல்ல
குருகுலம் - குருக்குலம் அல்ல
- ஆணவம் - 3 சுழி ண
- பள்ளியறை - பள்ளியரை அல்ல.
- துரோணர் - துரோனர் அல்ல
குருகுலம் - குருக்குலம் அல்ல
pizhaigaLaith thiruththiyathaRkku nanRi ayyA.
kUdiya mattum pizhaiyai thiruththi vandhirukkiREn. innum varikku vari sari paarththu ezhutha muyaRchchikkiREn. nanRi.
-Udhaya
kUdiya mattum pizhaiyai thiruththi vandhirukkiREn. innum varikku vari sari paarththu ezhutha muyaRchchikkiREn. nanRi.
-Udhaya
I was just posting to see if you take it in the right sense.
Glad you did.
முடிந்தவரை நல்ல தமிழில் எழுத நானும் முயற்சிக்கிறேன். நீங்களும் முயற்சியுங்கள்.
நன்றி.
சதீஷ்
http://kirukkals.com
Post a Comment
Glad you did.
முடிந்தவரை நல்ல தமிழில் எழுத நானும் முயற்சிக்கிறேன். நீங்களும் முயற்சியுங்கள்.
நன்றி.
சதீஷ்
http://kirukkals.com
