<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, July 23, 2007
 
# 248 வார்த்தைகள் ஏனடா?
இந்தப் பாடல், நண்பன் முரளியும் நானும் இணைந்து எழுதியது. விரைவில் முரளியின் இசையில் இப்பாடல் வெளிவர இருக்கிறது, அதுவரையில் வார்த்தைகள்தான்...

பெண்:
வார்த்தைகள் ஏனடா?
வன்முறைதானடா
மெளனமே காதலின்
மந்திரம்தானடா

ஆண்:
மெளனமே காத்திட
ஓர்வழி சொல்கிறேன்
உன்னிதழ் கொண்டு வா
ஒற்றியே வைக்கிறேன்

பெண்:
சங்கமிக்கும் நதிக்கடலாய்
கொந்தலிக்கும் எரிமலையாய்

ஆண்:
காதலின் ஜோதி தொட்டால்
காயமல்ல

பெண்:
வார்த்தைகள்...

ஆண்:
சொந்தம்
பல ஆயிரம் தொல்லைகள் தந்தும்
சிறு இன்பங்கள் கோடி
உறவுச் சிறையில்
உதிர்த்து உதிர்த்து போகாதோ?

பெண்:
முந்தும் என் ஆவல் காட்டிட அஞ்சும்
என் நெஞ்சில் நாணம்
அசைவும் இசைவும்
வேறு வேறு ஆகாதோ?

ஆண்:
உருக உருகவே மெழுகும் ஒளிவிடும்
உறவும் விளக்கு வா வா

பெண்:
ஒளிந்த உணர்வுகள் பொழிந்த மழையிலே
உண்மை வெப்பம் விலகும்

ஆண்:
காலை
பரமசுக வேளை
மென் துயிலிலே
உன் அருகிலே
படருவேன் மலையை மூடும் பனியாய்

பெண்:
காலையில் சூரியன்
கன்னமும் கிள்ளுவான்
வேலைகள் உண்டடா
விட்டிடு என்னையே?

ஆண்:
போர்வைக்குள் போர்க்களம்
வேர்வையின் ஊர்வலம்
பார்வையில் கார்வை
சீக்கிரம் சீர் வை

பெண்:
நாற்சுவரும் ஏனோ?
நான்கு குணங்கள் மறைத்திட அனுமதியோ?

ஆண்:
ஆழ் கடலைப் போலே
பெண்ணின் மனமும், அடங்குமோ நான்கினிலே?

பெண்:
உனது கேடயம் எந்தன் தேகமா?
பரிசு போலத்தானா?

ஆண்:
வழியைத் தேடினேன்
உறவுப் பாதையில்
இதயக் கோப்பை உனதே

பெண்:
காதல்
கலை பயில தாகம்
தலை சுழலவே
வலியும் சுகமே
பொன்னென ஆகும் கொல்லன் கலையில்

ஆண்:
சாகசம் ஊமையா
சம்மதம் சைகையா
சேர்த்ததே காதலின்
மந்திரப் பொய்கையா

பெண்:
ஈருடல் சேர்ந்திட
ஓர்வழி சொல்கிறேன்
உன்னிழல் எல்லையில்
என்னிழல் சேர்க்கிறேன்

ஆண்:
நஞ்சினிக்க வைக்கிறதே
மோனத்திலே பொய்க்குமுறல்

பெண்:
மோகமும் நோகவைக்கும்
தீஞ்சுவையோ

ஆண்:
சாகசம் ஊமையா...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
வாழ்த்துகள் உதயச் செல்வி.
பாடல்கள் இசைவடிவில் வெளிவந்ததும் தெரிவியுங்கள்.
 
This comment has been removed by the author.
 
கீதா,

உங்கள் வாழ்த்திற்கு என் நன்றி வணக்கம். ஒரு எழுத்தாளன் இரு பாலருக்கும் எழுத வேண்டும் என்பது என் கருத்து. இதை என் எழுத்தும் பின்பற்றுகிறது என்பதைக் காட்டுகிறது நீங்கள் என்னை செல்வி என்று அழைத்தது.

வெரும் தகவலாக இதைச் சொல்கிறேன், நான் செல்வன். ஆனால் கலையைப் பொருத்தவரையில் இது போன்ற வேறுபாடுகள் முக்கியமல்ல.
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com