<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, December 24, 2005
 
# 182 மீட்பு
அலைகடல் விழிகளில் நானா?
இதழ்தானே அழைப்பிதழ் ரோஜா?
மகரந்தம் நுகர்ந்தேன் நீயா?
மடிசாய்ந்தே மயங்கிடலாமா?
ரகசிய வசியத்தின் வசத்தில்
விண்ணுக்குள் விழுந்தேன் மீட்பாய்
நான்தான் விண்ணுக்குள் விழுந்தேன் மீட்பாய்

(அலைகடல்...

நடைபெரும் நாடக உலகில்
சில வரைமுறை எதிர்ப்பாய் இருக்கும்
நிகழ்வினில் ஆயிரம் பிணக்கம்
இது உறவுக்குள் சில நாள் நடக்கும்
அது போல் நடந்திடும்போது
இந்த நாட்களை மறந்துவிடாதே

வான் இறைந்தே வாழ்த்திடக் கலந்தோம்
நாம் இணைந்தே வாழ்ந்திடப் பிறந்தோம்
நீ என்னை நாடிய பொழுது
விண்ணுக்குள் விழுந்தேன் மீட்பாய்
நான்தான் விண்ணுக்குள் விழுந்தேன் மீட்பாய்

(அலைகடல்...

உறவுகள் ஆயிரம் வகையில்
பல வளர்ந்திட முயன்றே இறக்கும்
வளர்பிறையாகவே இருந்தால்
இங்கு முடிவின்றி பல நாள் நிலைக்கும்
உறவே வளர்ச்சியைத் தேடி
நம்மைத் தேங்கிட அனுமதிக்காதே

ஊர் உலகே மாறிய பொழுதும்
நாம் வயதால் வாடிட விளைந்தும்
நீ என்னைச் சேர்ந்திட்ட மிதப்பில்
விண்ணுக்குள் விழுவேன் மீட்பாய்
நான்தான் விண்ணுக்குள் விழுவேன் மீட்பாய்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com